அமித் ஷா சவாலை ஏற்ற எதிர்க்கட்சித் தலைவர்கள் : சூடுபிடிக்கும் சிஏஏ

0
1316

அமித் ஷா, குடியுரிமைத் திருத்தச்சட்டம் (சிஏஏ) குறித்து விவாதிக்கத் தயாரா என விடுத்த சவாலுக்கு மாயாவதி பதிலளித்துள்ளார்.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக உத்தரப்பிரதேச மாநிலம், லக்னெளவில் நேர்று(செவ்வாய்க்கிழமை) பேரணி நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்றுப் பேசுகையில், சிஏஏ குறித்து பொதுவெளியில் என்னுடன் விவாதிக்கத் தயாரா? என எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு சவால் விடுத்தார். அப்போது, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி ஆகியோரின் பெயர்களை அமித்ஷா குறிப்பிட்டார்.

இந்நிலையில், சிஏஏ குறித்து விவாதிக்கத் தயார் என பகுஜன்சமாஜ் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டிவிட்டர் பதிவில், “சர்ச்சைக்குரிய சிஏஏ/தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி)/தேசியமக்கள் தொகைப் பதிவேடு (என்பிஆர்) விவகாரங்களில் குறிப்பாக பெண்கள் மற்றும் இளைஞர்கள் உட்பட நாடு முழுவதும் நடைபெறும் போராட்டங்களால் அரசு பாதிக்கப்பட்டுள்ளது. சிஏஏ குறித்து விவாதம் நடத்த எதிர்க்கட்சிகளுக்கு அரசு சவால் விடுத்துள்ளது. இந்தச வாலை ஏற்றுஎ ந்தவொரு இடத்தில் வேண்டுமானாலும் விவாதிக்க பகுஜன்சமாஜ் கட்சி தயார்” என்று குறிப்பிட்டுள்ளார். 

இதேபோல், அமித்ஷா குறிப்பிட்டவர்களுள் மற்றொரு எதிர்க்கட்சித் தலைவரான சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ்வும் இந்த சவாலை ஏற்பதாகத் தெரிவித்துள்ளார்.ஆனால், இந்த விவாதத்துக்கான தலைப்பில் அவர் மாற்றம் தெரிவித்தார். இது குறித்துபேசிய அகிலேஷ் யாதவ், “விவாதத்துக்கான இடம் மற்றும் நேரத்தை பாஜக முடிவு செய்யட்டும். நான் அங்கு செல்வேன். ஆனால் வளர்ச்சி, வேலைவாய்ப்பு, இளைஞர்கள்,விவசாயிகள் உள்ளிட்டவையே விவாதத்தின் தலைப்பாக இருக்கவேண்டும்” என்றார்.

முன்னதாக, அகில இந்திய மஜ்லீஸ் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அசாதுதீன் ஒவைஸி நேற்று(செவ்வாய்கிழமை) இரவு இதுகுறித்து தெரிவிக்கையில், “நான் இங்கு இருக்கிறேன். எதற்காக அவர்களுடன் விவாதம், என்னுடன் விவாதியுங்கள். தாடி வைத்த மனிதருடன் விவாதியுங்கள். சிஏஏ, என்பிஆர் மற்றும் என்ஆர்சி குறித்து நாம் பேசி விவாதம் செய்வோம்” என்று குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here