பாரதிய ஜனதா கட்சி தேசியத் தலைவர் தவறான தகவல்களைத் தருவதாக ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியுள்ளார்.

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்த்தை மத்திய பாஜக அரசு வழங்காததை அடுத்து, அக்கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயக் கூட்டணியிலிருந்து தெலுங்கு தேசம் கட்சி விலகியது. மேலும் மத்திய அரசுக்கெதிராக தெலுங்கு தேசம் கட்சி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரக்கோரி, மக்களவைச் செயலரிடம் கடிதமும் கொடுத்துள்ளது.

இதனையடுத்து தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் மற்றும் ஆந்திர மாநிலத்தின் முதல்வருமான சந்திரபாபு நாயுடுவுக்கு பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா கடிதம் எழுதியிருந்தார். அதில், வளர்ச்சி அரசியலைக் கருத்தில் கொள்ளாமல், அரசியல் லாபத்திற்காக தெலுங்கு தேசம் கட்சி இந்த முடிவை எடுத்திருப்பதாகவும், ஆந்திர மாநிலத்தை வளர்ச்சி பெறச் செய்ய வேண்டும் என்பதில் பாஜக அரசு உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார். மேலும் அவர், ஆந்திராவின் வளர்சிக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் அம்மாநில அரசு 12 சதவிகித நிதியை மட்டுமே செலவழித்திருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

chandrababu

அமித்ஷாவின் இந்தக் குற்றச்சாட்டுக்கு சந்திரபாபு நாயுடு பதிலளித்துள்ளார். இது குறித்து அவர், ”ஆந்திராவுக்கு போதிய நிதி வழங்கியும் அம்மாநில அரசு அதனை முறையாகப் பயன்படுத்தவில்லை என அமித் ஷா கூறுகிறார். ஆந்திர மாநில அரசுக்கு போதிய நிர்வாகத்திறன் இல்லை என அவர்கள் சொல்ல முயற்சிக்கிறார்கள். ஆந்திர மாநிலத்தின் ஜிடிபி மற்றும் விவசாயத்துறை நல்ல முன்னேற்றத்தில் உள்ளது. தேசிய விருதுகளையும் பெற்றுள்ளது. இதுதான் எங்களின் நிர்வாகத் திறமை. ஏன் பொய்களைப் பரப்புகிறீர்கள்” என கேள்வி எழுப்பியுள்ளார்.

இதையும் படியுங்கள்: பிக் பாஸ் சீஸன் 2 – கமல் இடத்தை நிரப்பப் போவது யார் தெரியுமா?

1 கருத்து

ஒரு பதிலை விடவும்