அமித் ஷா குறித்து வெளியான செய்தி ரிலையன்ஸ் நடத்தும் இணையதளங்கள், டைம்ஸ் நௌ, நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸில் இருந்து நீக்கம்; என்ன நடந்தது ?

0
1123

அமித் ஷா இயக்குநராக இருக்கும் கூட்டுறவு வங்கியில் ரூ.745 கோடி டெபாஸிட் குறித்து வெளியான செய்தி ரிலையன்ஸ் நடத்தும் இணையதளங்கள், டைம்ஸ் நௌ மற்றும் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆகியவற்றிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறது .

பாஜக தலைவர்களை விமர்சித்து வரும் கட்டுரைகள் செய்தி இணையதளங்களில் இருந்து நீக்கப்படுவது இது முதல் முறையல்ல.

நவம்பர் 8, 2016 அன்று பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்னர் அமித் ஷாவுக்கு தொடர்புடைய கூட்டுறவு வங்கியில் ரூ. 500 மற்றும் ரூ. 1000 நோட்டுகள் அதிகமாக டெபாசிட் செய்யப்பட்டது தொடர்பாக வெளியான கட்டுரை டைம்ஸ் நௌ, நியூஸ்18.காம், ஃபர்ஸ்ட் போஸ்ட் மற்றும் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையதளங்களில் இருந்து ஜூன் 21ஆம் தேதி எந்தஅறிவிப்புமின்றி நீக்கப்பட்டது.

ஏன் நீக்கப்பட்டது என்று அச்செய்தி இணையதளங்களின் ஆசிரியர்களிடமிருந்து எந்த விளக்கமும் இது வரை கொடுக்கப்படவில்லை. நியூஸ்18.காம், ஃபர்ஸ்ட் போஸ்ட் ஆகிய இரண்டும் ரிலையன்ஸ் நிறுவனங்கள் குழுமத்தால்
நடத்தப்படும் இணையதளங்கள்.

Screen Shot 2018-06-23 at 11.16.50 AM

”நரேந்திர மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது அகமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கியில் (ஏடிசிபி) ஐந்து நாட்களில் செல்லாத ரூ.500, ரூ.1000 நோட்டுகள் மட்டும் ரூ.745.59 கோடி டெபாசிட் செய்யப்பட்டன.

கறுப்பு பண ஊடுருவலுக்கு அஞ்சி பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது ஐந்து நாட்கள் கழித்து, அதாவது நவம்பர் 14, 2016க்கு பிறகு அனைத்து கூட்டுறவு வங்கிகளும் செல்லாத ரூ.500, ரூ.1000 நோட்டுகளை, வாடிக்கையாளர்களிடம் பெற்றுக்கொள்ளத் தடை விதிக்கப்பட்டது.” என செய்தி வெளியானது.

Screen Shot 2018-06-23 at 11.16.39 AM

வங்கி இணையதளத்தின் படி, பல ஆண்டுகளாக வங்கியின் இயக்குநராக இருந்துவரும் அமித் ஷா இன்னும் அந்த பதவியை வகித்துத்துக்கொண்டு தான் இருக்கிறார். கூடுதலாக 2000ஆம் ஆண்டில் அவர் வங்கியின் தலைவராகவும் இருந்துள்ளார். அகமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கியின் மொத்த வைப்புத் தொகை மார்ச் 31, 2017 தேதிப்படி ரூ. 5,050 கோடி. 2016-17 ஆம் ஆண்டுக்கான மொத்த லாபம் ரூ. 14.31 கோடி.

தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனோரஞ்சன் எஸ். ராய் என்பவர் கேட்டதற்கு தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியின் (நபார்டு) தலைமை பொது மேலாளர் மற்றும் மேல்முறையீட்டதிகாரி எஸ். சரவணவேல் இத்தகவலைக் கொடுத்துள்ளார்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸின் ஆசிரிய இயக்குநர் பிரபு சாவ்லா “செய்தி நிறுவனத்தின் ஆசிரியர் தான் செய்தி விவகாரங்களில் இறுதிமுடிவு எடுப்பார்” என அந்நிறுவனத்தின் ஆசிரியரான ஜி.எஸ். வாசு பக்கம் இவ்விவகாரத்தை
திருப்பிவிட்டார்.

பாஜக தலைவர்களை விமர்சித்து வரும் கட்டுரைகள், செய்திகள் இணையதளங்களில் இருந்து நீக்கப்படுவது இது முதல் முறையல்ல. ஜூலை2017இல் டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிக்கையின் அகமதாபாத் பதிப்பில், பாஜக தலைவர் அமித் ஷாவின் சொத்து கடந்த ஐந்து ஆண்டுகளில் 300% உயர்ந்துள்ளதாக வெளியான கட்டுரை சில மணி நேரங்களில்
அந்நிறுவனத்தின் இணையதளத்திலிருந்து நீக்கப்பட்டது.

அக்கட்டுரையில் ஜவுளி மற்றும் செய்தி வெளியீட்டு துறை அமைச்சர் ஸ்ம்ரிதி இராணி தனது இளநிலை கல்வியை முடிக்கவில்லை என வாக்குமூலம் அளித்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. அதேபோல 2017 ஜுலை 29 அன்று டிஎன்ஏ (DNA) வின் அச்சு பிரதியில் வெளியான கட்டுரை மற்றும் ஔட்லுக் (Outlook) ஹிந்தி இணையதளத்தில் வெளியான கட்டுரையும் எந்த விளக்கமும் கொடுக்கப்படாமல் நீக்கப்பட்டன.

சில மாதங்களுக்கு பிறகு, டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் ஜெய்பூர் பதிப்பில் பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா திட்டத்தை விமர்சித்து செப்டம்பர் 14,2017இல் வெளியான கட்டுரை சில மணி நேரங்களில் அந்நிறுவனத்தின்
இணையதளத்திலிருந்து நீக்கப்பட்டது.

உலக பத்திரிகை சுதந்திரம் குறித்த அறிக்கையும் கூட டைம்ஸ் ஆஃப் இந்தியா மற்றும் இகொனோமிக் டைம்ஸ் (Economic Times) இணையதளங்களிலிருந்து மே மாதம் நீக்கப்பட்டது. இது குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் ஆசிரியர் பிரசாத் சன்யாலிடம் கேட்ட போது அது ’ஆசிரியரின் உரிமை’ என விளக்கமளித்திருந்தார்.

Courtesy : The wire

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here