அமித் ஷா – அரவிந்த் கெஜ்ரிவால் இடையே மோதல் :பல்பு வாங்கும் பாஜக: களைகட்டும் டெல்லி தேர்தல்

0
1202

டெல்லியில் அடுத்த மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இடையே வார்த்தை போர் நடந்து வருகிறது. 

நேற்றிரவு டெல்லி பாஜக தனது டிவிட்டர் பதிவில், டெல்லி அரசால் வழங்கப்பட்ட இலவச வை-பை வசதியை மத்திய உள்துறை அமைச்சரால் பெற முடியவில்லை என்றும் வை-பை இணைப்பை தேடி தேடி அவரது போனில் சார்ஜ் தீர்ந்துபோனதாக கிண்டல் பதிவொன்று இடப்பட்டது. 

இதையடுத்து அதற்கு பதிலளிக்கும் வகையில் கெஜ்ரிவால் தனது டிவிட்டர் பதிவில், மிஸ்டர் ஷா எனது அரசு, போன்களுக்கு இலவச சார்ஜிங் செய்ய வசதியையும் அளித்து வருகிறது. 

இலவச வை-பை வசதியுடன் இலவச சார்ஜிங் நிலையங்களையும் கொண்டுள்ளோம். இதற்காக உள்துறை அமைச்சர் மின்சார கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை. ஏனென்றால், நமது அரசு டெல்லி குடிமகன்களுக்கு 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். 

இதனிடையே, கடந்த தேர்தலில் 1,041 அரசு பள்ளிகளில் 1.2 லட்சம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் என கடந்த தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால் அளித்த வாக்குறுதி குறித்தும் மீண்டும்இருவருக்கும் இருவருக்கும் இடையே மோதல் வெடித்தது. 

இதுதொடர்பாக டெல்லி பாஜக தனது டிவிட்டரில், ஒரு சில கேமராக்களை பொருத்தி விட்டு ஆம் ஆத்மி கட்சி மக்களை முட்டாள் ஆக்குவதாக அமித் ஷா குற்றம்சாட்டியதாக குறிப்பிட்டது. 

இதற்கு பதிலளித்த கெஜ்ரிவால், ஒரு சில சிசிடிவி கேமராக்கள் இருப்பதை கண்டறிந்ததற்கு அமித் ஷா மற்றும் பாஜகவுக்கு நன்றிகள். 

ஒருசில நாட்களுக்கு முன்பாக ஒரு சிசிடிவி கேமரா கூட பொருத்தவில்லை என்று கூறிய பாஜக தற்போது ஒரு சில கேமராக்களை மட்டும் பொருத்தியுள்ளதாக கூறுவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்று பதிலடி கொடுத்துள்ளார். 

இரண்டு கட்சித் தலைவர்களும் டெல்லி சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்றைய தினம் இருவரும் ஒரே பகுதியில் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டனர். 

டெல்லி சட்டமன்ற தேர்தலானது வரும் பிப்.8 ஆம் தேதி நடைபெற உள்ளது. அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி இதில் இரண்டாவது முறையாக வெற்றியை தக்கவைத்துக்கொள்ளும் முனைப்பில் களம் அமைத்து வருகிறது. கடந்த 2015 தேர்தலில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 67 தொகுதிகளில் வெற்றி பெற்ற ஆம் ஆத்மி இந்த முறை 70 இடங்களிலும் வெற்றி பெற வேண்டும் என்பதை இலக்காக கொண்டுள்ளது. 

இதற்காக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் அவரது ஆம் ஆத்மி அரசும் இலவச வை-பை மற்றும் இலவச மின்சாரம் உள்ளிட்ட சலுகைகளை வழங்கி மீண்டும் ஆட்சியை பிடிக்க தீவிர முனைப்பு காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here