சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி லோயா மரணம் குறித்து சிறப்பு விசாரணைக் குழு விசாரிக்கக்கோரிய வழக்கில், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

சொராபுதீன் சேக் என்கவுன்டர் தொடர்பான வழக்கை மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்தது. இந்த வழக்கின் முக்கிய குற்றவாளி, பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயலாளர் அமித் ஷா ஆவார். இந்நிலையில் இந்த வழக்கினை விசாரித்து வந்த சிபிஐ நீதிபதி பிரிஜ்கோபால் ஹர்கிஷன் லோயா, கடந்த 2014ஆம் ஆண்டு டிசம்பர் ஒன்றாம் தேதி அதிகாலை மரணமடைந்தார்.

இதையும் படியுங்கள்: உச்சநீதிமன்ற நீதிபதிகளைப் பேச வைத்த லோயா வழக்கு

அவரது மரணம் குறித்து ’தி காரவன்’ இதழ் செய்தி வெளியிட்டிருந்தது. அதில், மும்பை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி மொஹித் ஷா, நீதிபதி லோயாவிடம் சாதகமான தீர்ப்புக்காக 100 கோடி ரூபாய் வரை தருவதாக பேசியிருப்பதாக லோயாவின் சகோதரிகளில் ஒருவர் அனுராதா பியான் கூறியிருந்தார். மேலும் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையும் படியுங்கள்: நீதிபதி லோயா “படுகொலை”யை மறைக்க மகாராஷ்டிர முதல்வர் முயற்சி

இதனால் நீதிபதி லோயா மரணம் குறித்து வெளிப்படை மற்றும் நேர்மையான முறையில் விசாரணை நடத்த வேண்டும் எனக் கூறி மகாரஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் பிஆர் லோன் உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. இதனிடையே இந்த வழக்கில் எதிர்மனுதாரராகவுள்ள மகாராஷ்டிரா மாநில அரசு, உச்சநீதிமன்றத்தில் போலியான ஆவணங்களைத் தாக்கல் செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதனைத்தொடர்ந்து சமீபத்தில் காரவன் இதழ் மீண்டும் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது. அதில் நீதிபதி லோயா மாரடைப்பால் மரணிக்கவில்லை என மரணம் தொடர்பான அறிக்கைகளை ஆய்வு செய்த டெல்லி எய்ம்ஸ் (All India Institute of Medical Sciences) தடவியல் துறையின் முன்னாள் தலைவரான டாக்டர் ஆர்.கே.ஷர்மா கூறியுள்ளதாக தெரிவித்திருந்தது. மேலும், லோயா மரணம் தொடர்பான ஆவணங்களின் அடிப்படையில், அவர் தலையில் அடிபட்டும், விஷம் மூலமாகவும் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் ஷர்மா கூறியதாக செய்தி வெளியிட்டிருந்தது.

இதையும் படியுங்கள்: அமித் ஷா வழக்கை விசாரித்த சிபிஐ நீதிபதி லோயா மாரடைப்பால் மரணிக்கவில்லை: தடயவியல் நிபுணர்

இந்நிலையில் இந்த வழக்கு வெள்ளிக்கிழமை (இன்று) விசாரணைக்கு வந்தது. அப்போது மகாராஷ்டிரா மாநில அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷாவின் பெயரைக் குறிப்பிடாமல், தனிப்பட்ட நபரைச் சிக்க வைப்பதற்காக இந்த வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மேலும் டாக்டர் ஷர்மா கூறியுள்ள வார்த்தைகளில் நம்பகத்தன்மை இல்லையென்றும் தெரிவித்தார்.

மும்பையைச் சேர்ந்த கிங் எட்வர்டு அரசு மருத்துவமனையின் தடயவியல் நிபுணர் ஹரிஷ் பதக்கின் அறிக்கையைத் தாக்கல் செய்தார். அதில் இதய நோய் தொடர்பாக நீதிபதி லோயா மரமணமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததை அடுத்து, தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்தது.

Source: Scroll.in

இதையும் படியுங்கள்: ஒக்கி புயல் பேரிடரின் முதல் ஆவணம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here