கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவைகளை அடிப்படையாக வைத்து, பெட்ரோல், டீசல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் 15 நாட்களுக்கு ஒரு முறை நிர்ணயித்து வந்தன. இந்நிலையில், 15 நாட்கள் என்பதற்குப் பதிலாக தினமும் விலையை நிர்ணயிக்கும் முறையை, கடந்த மே மாதம் ஒன்றாம் தேதி முதல் சோதனை அடிப்படையில் முதல் கட்டமாக புதுச்சேரி, விசாகப்பட்டிணம், ராஜஸ்தானில் உதய்ப்பூர், ஜார்க்கண்டில் ஜாம்ஷெட்பூர், சண்டிகார் ஆகிய ஐந்து நகரங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது இந்த நடைமுறை நாடு முழுவதும் வெள்ளிக்கிழமை (இன்று) முதல் அமலுக்கு வந்தது. இந்த விலை மாற்றம் குறித்த அறிவிப்பு தினமும் காலை ஆறு மணிக்கு வெளியாகும்.

பெட்ரோல், டீசல் விலையை பெட்ரோல் பங்க்குகளிலும், fuel@IOC என்ற மொபைல் ஆப் மூலமும் தெரிந்து கொள்ளலாம்.

இதையும் படியுங்கள் : கஷ்டப்படுபவர்களுக்கு ஆதரவாயிருங்கள் ; மனம்விட்டுப் பேசவிடுங்கள்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்