விவாகரத்துக்குப் பிறகு முன்னிலும் வீரியமாக நடிக்க ஆரம்பித்திருக்கிறார் அமலா பால். அவரது எண்ணமும், வண்ணமும் விசாலமாகியுள்ளன. நாயகி மையப் படங்களில் தேடிப்போய் நடிக்கிறார். அதோ அந்தப் பறவை போல படத்தைத் தொடர்ந்து அவர் நடிக்கும் மற்றுமொரு படம் ஆடை.

மேயாத மான் படத்தை இயக்கிய ரத்னகுமார் இயக்கும் நாயகி மையப்படம்தான் ஆடை. அமலா பால் பிரதான வேடத்தில் நடிக்கிறார். வி ஸ்டுடியோஸ் தயாரிப்பு. இதன் பர்ஸ்ட் லுக்கை வெங்கட்பிரபு ட்விட்டரில் வெளியிட்டார். பர்ஸ்ட் லுக்கைப் பார்த்த அனைவருக்கும் பிரமிப்பு. ஹாலிவுட் நாயகி போல் கந்தர்கோலத்தில் காட்சியளிக்கிறார் அமலா பால். பெயரில் ஆடை இருப்பதால் அது மட்டும் அமலா பாலிடம் கொஞ்சம் குறைவாகவே உள்ளது.

ஹாரர் படம் என்பதை அமலா பாலின் கண்ணில் தெரியும் பயமும், கையில் உள்ள இரும்பும், கதறும் வாயும் உறுதி செய்கின்றன.

படம் எப்போ ரிலீஸ்…?

https://twitter.com/vp_offl/status/1036939495852060672

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்