டுகாட்டி ஸ்க்ராம்ளர் அறிமுகம் செய்யப்பட்டு 3 ஆண்டுகள் கடந்து விட்டன. இந்த வண்டி அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து 55 ஆயிரம் யூனிட்டுகள் விற்பனையாகி உள்ளன.
அப்டேட் செய்யப்பட்ட புதிய டுகாட்டி ஸ்க்ராம்ளர் பைக் தற்போது வெளியாகவுள்ளது. புதிய பைக்கில் ஒரு சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

2019-Ducati-Scrambler-Icon-21

புதிய டுகாட்டி ஸ்க்ராம்ளர் 2019 பைக்கின் முகப்பில் ஆட்டோமேட்டிக் எல்.இ.டி. விளக்குகளும், எல்.இ.டி. இண்டிகேட்டர்களும் பொருத்தப்பட்டுள்ளன. புதிய ஸ்க்ராம்ளரில் உள்ள லைட்டுகள் அனைத்தும் எல்.இ.டி. வகையை சேர்ந்தது.

புதிய டுகாட்டி ஸ்க்ராம்ளர் எஞ்சினில் அலுமினியம் ஃபினிஷிங், புதிய மஃப்ளர் கவர்,டேங்க் பேனல், 10 ஸ்போக் அலாய் வீல் ஆகியவற்றுடன் மஞ்சள் ஆரஞ்ச் என 2 வண்ணங்களில் வெளியாகவுள்ளது.

3

கார்னரிங் ஏ.பி.எஸ். டுகாட்டி 2019-ல் கொடுக்கப்பட்டுள்ளது.டுயல் சேனல் கார்னரிங் ஏ.பி.டி. இதில் பொருத்தப்பட்டுள்ளது. திடீரென ஏற்படுத்தப்படும் பிரேக்கை எதிர்கொள்ளும் வகையில் புதிய கருவிகள் உள்ளதாக டுகாட்டி தெரிவித்துள்ளது.

டுகாட்டி 2019-ல் புதிய ரக சீட்டுகள் பொருத்தப்பட்டுள்ளன. உயரம் 798 மி.மீ. அளவுக்கு குறைக்கப்பட்டதுடன் அகலம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. ஃப்ளாட்டர் ஹேண்டில் பார்கள் கச்சிதான பிடிப்பை கைகளுக்கு அளிக்கும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

2019-Ducati-Scrambler-Icon-orange

அத்துடன் புதிய எல்.சி.டி. திரை சிஸ்டம், ஹைட்ராலிக் க்ளட்ச் கன்ட்ரோல், புதுப்பிக்கப்பட்ட சஸ்பென்ஷன் செட்-அப்புடன், சற்று உயர்த்தப்பட்ட கிரவுன்ட் கிளியரன்ஸ் ஆகியவையும் புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

டுகாட்டி 2019 ஸ்க்ராம்ளர் பைக் இந்தாண்டு இறுதியில் அல்லது அடுத்தாண்டு தொடக்கத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here