இன்று ஆரம்பித்த கடைசி டெஸ்ட்டில் புஜாரா அபாரமாக ஆடி சதமடித்தார். இந்த டெஸ்ட் தொடரில் அவரின் 3வது சதம் இதுவாகும்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று(வியாழக்கிழமை) சிட்னியில் துவங்கியது. டாஸ் வென்று இந்தியா பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது.

துவக்க ஆட்டக்காரரான ராகுல் 9 ரன்னில் ஹேசல்வுட் பந்தில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த புஜாராவும், மயன்க் அகர்வாலும் நிதானமாக ஆடி ரன் சேர்த்தனர்.மயன்க் அகர்வால் 77 ரன்னுக்கு ஆட்டமிழந்தார்.

இந்நிலையில் புஜாரா டெஸ்ட் போட்டிகளில் தனது 18வது சதத்தை பூர்த்தி செய்தார். இந்த தொடரில் அவரது மூன்றாவது சதம் இதுவாகும்.

இந்தத் தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரராகவும் புஜாரா விளங்குகிறார். அதிக சதமடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் 7வது இடத்துக்கு முன்னேறினார்.
இந்திய அணியில் ரோஹித் ஷர்மாவுக்கு பதிலாக ராகுலும், ஆஸ்திரேலிய அணியில் பின்ச், மிட்செல் மார்ஷுக்கு பதிலாக லப்ஸங்னே, ஹேண்ட்ஸ்கோம்பும் சேர்க்கப்பட்டனர்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்