தேசத்தை கட்டமைப்பதற்கான ஒரே வழி அன்பும், இரக்கமும்தான் என்று ராகுல்காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மக்களவையில் பிரதமர் மோடியின் பேச்சு மக்களிடம் வெறுப்பு மற்றும் கோபத்தைத்தான் விதைத்துள்து என்று ராகுல் தெரிவித்துள்ளார்.

மத்தியில் ஆளும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளால் மக்களவையில் வெள்ளிக்கிழமை கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம், விவாதத்துக்குப் பிறகு தோல்வி அடைந்தது.

நேற்று (வெள்ளிக்கிழமை ) மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து பிரதமர் மோடி பேசியது குறித்து ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில், மோடியின் பேச்சு, மக்களின் இதயத்தில் வெறுப்பு, அச்சம், பயம் மற்றும் கோபத்தை விதைத்துள்ளார் என்றும்

மேலும், இந்தியர்களின் இதயத்தில் அன்பு மற்றும் அக்கறையை பெற்றோம் என நிரூபிக்க போகிறோம். இதுதான் தேசத்தை உருவாக்குவதற்கான ஒரே வழியாகும் என்று ராகுல் பதிவிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்