அன்னிய முதலீட்டு விதிகளில் மாற்றம்: அமேசானுக்கு வருகிறது நெருக்கடி

The government discussions coincide with a growing number of complaints from India's bricks-and-mortar retailers, which have for years accused Amazon and Walmart-controlled Flipkart of creating complex structures to bypass federal rules, allegations the US companies deny.

0
152

இந்தியாவின் அன்னிய முதலீட்டு விதிகளில் மாற்றம் செய்ய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்கள் அன்னிய நேரடி முதலீட்டு விதிகளை மீறுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றது. நாட்டில் வர்த்தகம் செய்யும் இரண்டு பெரிய இ-காமர்ஸ் நிறுவனங்களான பிளிப்கார்ட் மற்றும் அமேசானில் அந்நிய முதலீடு குறித்து அமலாக்க இயக்குநரகம் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி விசாரிக்க அரசு அவர்களுக்கு சமீபத்தில் உத்தரவிட்டது.

இது குறித்து அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு(கேட்) அந்நிய நேரடி முதலீட்டு கொள்கை மற்றும் ஃபெமா விதிகளை மீறுவது குறித்து பல புகார்களை அளித்தது. இதன் பின்னரே மத்தியஅரசு இப்படி ஒரு நடவடிக்கையை எடுத்துள்ளது.

புதிய விதிமுறைகள் அமலுக்கு வரும்பட்சத்தில், ‘அமேசான்’ உள்ளிட்டபல நிறுவனங்களுக்கு பாதிப்புகள் ஏற்படும் என கருதப்படுகிறது.

மேலும், அவை தங்களுடைய விற்பனையாளர்களுடனான கூட்டை, மறுசீரமைக்க வேண்டிய நிலையும் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து, உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: அன்னிய முதலீட்டுக்கான விதிகளை மாற்றி அமைப்பது குறித்து, மத்திய அரசு தீவிரமாக உள்ளது.

அண்மைக்காலமாக, உள்நாட்டு சில்லரை விற்பனையாளர்கள், அமேசான், ‘வால்மார்ட்’ உள்ளிட்டநிறுவனங்களின் முதலீடுகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து, தொடர்ந்து புகார்களை தெரிவித்து வருகின்றனர். வெளிநாட்டு மின்னணு வர்த்தக நிறுவனங்கள், வாங்குபவர்கள் மற்றும் விற்பவர்களை இணைக்கும் ஒரு சந்தையாக மட்டுமே செயல்பட இந்தியா அனுமதித்துஉள்ளது.

பொருட்களை சேர்த்து வைக்கவோ, அவற்றை நேரடியாகவிற்பனைக்கு விடுக்கவோ அவற்றுக்கு அனுமதி கிடையாது. மேலும், வெளிநாட்டு நிறுவனங்கள், அவை நேரடியாக பங்கு முதலீடு செய்திருக்கும் விற்பனையாளர்களின் பொருட்களை விற்கவும் தடை விதிக்கப்பட்டது.

இப்போது அடுத்தகட்டமாக, இத்தகைய மின்னணு வர்த்தக நிறுவனங்கள், நேரடியாக இல்லாமல் மறைமுகமாக தங்களின் தாய் நிறுவனங்கள் மூலம் விற்பனையாளர்களின் பங்குகளை வைத்திருந்தாலும், அந்த தயாரிப்புகளை விற்பனை செய்யக்கூடாது என மாற்றம் செய்யப்பட உள்ளது.

கடைசியாக கடந்த டிசம்பர் 2018 நேரடி முதலீட்டு விதிகளால் அமேசான் உள்ளிட்ட நிறுவனங்கள் பாதிக்கப்பட்டன. தற்போது புதியாக கொண்டு வரப்படும் விதிகள் மூலம் இன்னும் பாதிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு மிகப் பெரிய, ‘ஆன்லைன்’ விற்பனையாளர்களின் பங்குகளை மறைமுகமாக வைத்திருக்கிறது. இதனால், தொடர்ந்து முதலீடுகள் கேள்விக் குறியாகியுள்ளன.

இதுகுறித்து, அமேசான் தரப்பில், ‘அன்னிய முதலீடுகளில் பெரியளவில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டால், அதுநாட்டின் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை கடுமையாக பாதிக்கும்’ என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here