அனைத்து சமுதாயத்தினரின் வாக்குகள் எனக்கு விழவில்லை என்று நிரூபித்தால் 8 நாட்களில் ராஜினாமா -சமாஜ்வாடி எம்பி

0
342

 அனைத்து சமுதாயத்தினரின் வாக்குகள் எனக்கு கிடைக்கவில்லை என்று நிரூபித்தால் 8 நாட்களில் ராஜினாமா செய்து விடுவதாக எதிர்க்கட்சிகளுக்கு சமஜ்வாடி கட்சி எம்.பி அசாம் கான்  சவால் விடுத்துள்ளார். 

உ.பி மாநிலம் ராம்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சமாஜ்வாடிக் கட்சியின் முக்கியத் தலைவரான அசாம் கான் இவ்வாறு சவால் விடுத்துள்ளார். 

 தேர்தல் முடிவுகளில் எதிர்த்து போட்டியிட்ட ஜெயபிரதாவை அசாம் கான் 1.09 லட்சம்  வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்  

இந்நிலையில் அனைத்து சமுதாயத்தினரின் வாக்குகள் எனக்கு விழவில்லை என்று நிரூபித்தால் 8 நாட்களில் ராஜினாமா செய்து விடுவதாக எதிர்க்கட்சிகளுக்கு சவால் விடுத்துள்ளார். 

இதுதொடர்பாக ராம்பூரில் செய்தியாளர்களிடம் வெள்ளியன்று பேசிய அவர் கூறியதாவது:

அனைத்து சமுதாயத்தினரின் வாக்குகள் எனக்கு விழுந்துள்ளது. இதை நீங்கள் வாக்குச் சாவடிகளில் சரிபார்த்துக் கொள்ளலாம்.எனது அரசியல் எதிரிகளுக்கு நான் சொல்லிக் கொள்ள விரும்புவது என்னவென்றால், இதைத் தவறு என்று நிரூபித்தால் 8 நாட்களில் நான் எனது எம்பி பதவியை ராஜினாமா செய்து விடுகிறேன்.

சமாஜ்வாடி – பகுஜன் சமாஜ் கூட்டணிக்கு ஏன் எதிர்பாத்த அளவுக்கு வெற்றி கிடைக்கவில்லை என்பது குறித்து கட்சியின் மூத்த தலைவர்கள் விரைவில் கூடி ஆலோசிப்பார்கள். 

பிரதமர் மோடி தனக்கு அளிக்கப்பட்டு இருக்கும் மாபெரும் தீர்ப்பை மனதில் கொண்டு, சமூகத்தில் யாரையும் பழிவாங்கும் நோக்கம் இல்லாமல் சிறப்பாகச் செயல்படுவார் என்று நம்புகிறேன் என்றார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here