அனுமான் ஒரு தலித், அதனால் தலித் மக்கள் பாஜகவிற்கு வாக்களிக்க வேண்டும் என்று ராஜஸ்தான் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய உத்தர பிரதேச முதல்வர் ஆதித்யநாத் குறிப்பிட்டு இருக்கிறார்.

ராஜஸ்தானில் வரும் டிசம்பர் 7ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. ராஜஸ்தான் தேர்தலுக்காக பாஜக தற்போது தீவிர பிரச்சாரம் செய்து வருகிறது.

இந்த நிலையில் ராஜஸ்தானில் சட்டமன்ற தேர்தலுக்காக உத்தர பிரதேச முதல்வர் ஆதித்யநாத் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார். ராஜஸ்தான் ஆல்வாரில் பிரச்சாரம் மேற்கொண்ட யோகி ஆதித்யநாத் கடவுள் அனுமான் ஒரு தலித் ஆதிவாசி . அதனால் தலித்துகள் பாஜகவுக்கு ஓட்டளிக்க வேண்டும் என்று பேசினார்.

மக்களை பிரித்து அதில் ஆதாயம் அடைவதில் திறன் கொண்ட யோகி ஆதித்யநாத் தனது பிரச்சாரத்தில், அனுமான் ஒரு தலித். அவர் பழங்குடி இனத்தை சேர்ந்தவர். அவர் இந்தியா முழுக்க இணைந்து இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். ராமரின் ஆசையும் அதுதான். தெற்கும், வடக்கும், மேற்கும், கிழக்கும் இணைந்து இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். அதை நாம் நிறைவேற்ற வேண்டும். பாஜக அதை நிறைவேற்றும்

அனுமான் ஒரு தலித் என்பதால் தலித்துகள் கண்டிப்பாக பாஜகவிற்கு வாக்களிக்க வேண்டும். பாஜகவின் ஆசையையும், ராமரின் ஆசையையும் நிறைவேற்ற பாஜகவிற்கு மக்கள் வாக்களிக்க வேண்டும். இந்த யுத்தத்தில் அனுமார் படைதான் வெல்ல வேண்டும் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

மேலும் பேசிய அவர் நாங்கள் ராமர் படை, காங்கிரஸ் ராவண படை. ராமருக்கு வாக்களிக்க விரும்பினால் பாஜகவிற்கு வாக்களியுங்கள். ராவணன் வேண்டும் என்றால் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களியுங்கள் என்று பேசினார்.

ராஜஸ்தானில் யோகி ஆதித்யநாத் பிரச்சாரத்தில் முழுக்க முழுக்க ராமர் குறித்து ராமாயணம் குறித்தும்தான் பேசி வருகிறார். எப்போதும் மதம் பற்றி பேசும் இவர் இந்த முறை ஜாதி குறித்து அதிகமாக பேசினார்.

யோகி ஆதித்யநாத் இவ்வாறு பேசுவது முதன்முறையல்ல, இதற்கு முன்னர் சட்டீஸ்கர் சட்டப் பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போதும் இவ்வாறு பேசியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here