பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா, தனது முகநூல் பதிவு குறித்து விளக்கமளித்துள்ளார்.
திரிபுராவில் லெனின் சிலை இடிக்கப்பட்டதுபோல் தமிழகத்தில் தந்தை பெரியார் சிலை உடைக்கப்படும் என பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதற்கு தமிழக அரசியல் கட்சிகள், சமூக நல அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டன. இதனிடையே ஹெச்.ராஜா அந்தப் பதிவை நீக்கிவிட்டார். இந்நிலையில், அந்தப் பதிவு தனது அனுமதியின்றி முகநூல் அட்மின் இந்தக் கருத்தினைப் பதிவிட்டதாகத் தெரிவித்துள்ளார். மேலும் அவர், இந்தப் பதிவு குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்: 35 கோடி குழந்தைகள் போர் நடைபெறும் பகுதிகளில் தவிப்பு – Save the Children