அனில் அம்பானி மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நீதிபதியின் உத்தரவை திருத்தி வெளியிட்டதாக இரண்டு உதவி பதிவாளர்கள் அதிரடியாக டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர்.

எரிக்சன் நிறுவனத்துக்கு 550 கோடி ரூபாயை செலுத்தாததால் நீதிமன்ற அவமதிப்புக்கு ஆளாகிய அனில் அம்பானி உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

நீதிபதி நாரிமன் அமர்வு இந்த வழக்கை விசாரித்து வரும் நிலையில், வழக்கில் நீதிபதி நாரிமன் எழுதிய உத்தரவை, விதிமுறைகளை மீறி திருத்தி உச்ச நீதிமன்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்ததாக மானவ் சர்மா மற்றும் தபான் குமார் சக்ரபோர்தி ஆகிய இரண்டு உதவி பதிவாளர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர்.

ஜனவரி, 2019 நீதிபதி நாரிமன் தலைமையிலான அமர்வு அனில் அம்பானியை உச்சநீதிமன்றத்தில் ஆஜராகும்படி உத்தரவிட்டது. இது நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பின்பற்றப்படும் வழக்கமான விதிமுறை ஆகும். இதை இரண்டு உதவி பதிவாளர்கள் திருத்தி எழுதிவிட்டனர்.

14

இந்த திருத்தத்தை எரிக்சன் நிறுவனத்தின் வழக்கறிஞர்கள் நீதிபதி நாரிமன் அமர்வுக்கு தெரியப்படுத்தினர். இதன்பிறகு ஜனவரி 10 ஆம் தேதி இந்த திருத்தத்தை மாற்றி எழுதி அனில் அம்பானியை உச்சநீதிமன்றத்தில் ஆஜராகும்படி ஜனவரி 10 ஆம் தேதி உத்தரவிட்டது. இந்த வழக்கு குறித்த தீர்ப்பு புதன்கிழமைக்கு ஒத்தி வைத்துள்ளது.

நீதிபதி நாரிமன் அளித்த புகாரின் அடிப்படையில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் விசாரணை நடத்தி திருத்தம் செய்த உதவி பதிவாளர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here