ஆயுஷ்மான் பாரத் திட்டத்துக்கு பாஜக அரசு ஒருவருக்கு வெறும் 40 ரூபாய் மட்டுமே செலவிடுகிறார் பிரதமர். ஆனால் ரஃபேல் ஊழல் மூலம் அனில் அம்பானிக்கு ரூ.1,30,000 கோடி வழங்குகிறார் என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டத்தை பிரதமர் மோடி கடந்த 23-ஆம் தேதி தொடங்கிவைத்தார். அதேசமயம் ராகுல் காந்தி ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக பிரதமர் மோடியை கடுமையாக விமரிசித்து வருகிறார்.

ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டத்தையும், ரஃபேல் ஒப்பந்தத்தையும் பற்றி ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில்
இந்தியாவின் காவலாளி அரசு கருவூலத்தை எப்போது திறப்பார்? ரஃபேல் ஊழலில் அனில் அம்பானிக்கு ரூ.1,30,000 கோடி வழங்குகிறார். 50 கோடி இந்திய மக்களுக்கு ஆயுஷ்மான் பாரத் திட்டம் மூலம் ரூ.2,000 கோடி வழங்குகிறார். ரூ.5 லட்சம் மருத்துவ காப்பீடு திட்டத்தில் ஒரு நபருக்கு ஆண்டுக்கு வெறும் 40 ரூபாய் தான் பிரதமர் செலவழிக்கிறார். இந்த செய்தி உங்களுடைய விளம்பரம், சிறப்பு மோடி அவர்களே” என்று பதிவிட்டுள்ளார்.