அனிதாக்களின் உயிர் பறித்து, ஆள்மாறாட்டம் செய்தவர்களுக்கு MBBS சீட்டா? ஸ்டாலின் கோபம்

0
208

வியாழனன்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின்  நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்யப்பட்டுள்ளதைக் கண்டித்து, தனது டிவிட்டர் பக்கத்தில் 

+2 பொதுத்தேர்வில் உரிய மதிப்பெண் பெற்ற அனிதாக்களின் உயிரைப் பறித்து, ஆள்மாறாட்டம் செய்த உதித்சூரியாக்களுக்கு MBBS சீட் வழங்கும் #NEET கொடூரத்தை இனியும் தொடர அனுமதிப்பதா?

மத்திய அரசின் மாணவர் விரோதப் போக்கையும் அதற்குத் துணைபோகும் அடிமை அ.தி.மு.க அரசையும் அம்பலப்படுத்துவோம்!

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

சென்னையை சேர்ந்த மாணவர் ஒருவரும் முதலாம் ஆண்டு எம்.பி.பி.எஸ். படித்து வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையை சேர்ந்த மாணவர் குறித்து கல்லூரி முதல்வர் ராஜேந்திரனுக்கு இ-மெயில் மூலம் புகார்கள் வந்தன.
இந்த புகாரின் பேரில், சம்பந்தப்பட்ட மாணவரை அழைத்து விசாரித்த போது முன்னுக்குபின் முரணான தகவல்களை அவர் கொடுத்தார்.  அதன் பின்னர் சென்னை மாணவரின் பெற்றோரை தேனி அரசு மருத்துவ கல்லூரிக்கு வரவழைத்தனர். அவர்களிடமும் விசாரணை நடத்தினர். 
இந்த விசாரணைக்கு பின்னர் அந்த மாணவர் கல்லூரிக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது. தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் ராஜேந்திரன், க.விலக்கு போலீசில் நேற்று புகார் கொடுத்தார்.  அந்த புகாரை பெற்றுக்கொண்டு க.விலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த புகாரில் மாணவர் உதித் சூர்யா வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர்.  இதற்கிடையில்,  சென்னை வீட்டை பூட்டி விட்டு உதித் சூர்யாவின் தந்தை குடும்பத்துடன் தலைமறைவு ஆகியுள்ளது தெரிய வந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here