அந்தமானில் உள்ள 3 தீவுகளின் பெயரை மாற்ற மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்தமான் – நிக்கோபர் கடல் பகுதியில் உள்ள ரோஸ், நீல் மற்றும் ஹேவ்லாக் (Ross, Neil and Havelock islands) ஆகிய தீவுகளின் பெயரை மாற்ற திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கான நடைமுறைகளை பெரும்பாலும் மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

அதன்படி, ரோஸ் தீவுக்கு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தீவு என்றும், நீல் தீவுக்கு ஷகீத் தீப் தீவு என்றும், ஹேவ்லாக் தீவுக்கு ஸ்வராஜ் தீப் (Netaji Subash Chandra Bose island, Shaheed dweep, and Swaraj dweep) என்றும் பெயர் மாற்றம் செய்யப்பட இருப்பதாகவும், அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் அமைச்சகம் செய்துள்ளது .

அந்தமான் தலைநகர் போர்ட் பிளேரில், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தேசியக் கொடியை ஏற்றியதன், 75வது ஆண்டை முன்னிட்டு, வரும் 30 ஆம் தேதி நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று 150 மீட்டர் உயர கம்பத்தில் தேசியக்கொடி ஏற்றி வைக்க உள்ளார் . அந்த நிகழ்ச்சியின்போது, தீவுகளின் பெயர் மாற்றம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட உள்ளது .

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்