உங்கள் நாவில் சுவையை தூண்டும் பர்மி அத்தோ. அனைவரும் விரும்பும் ருசியான பர்மி அத்தோ ரெசிபியை சமைத்து சுவைக்கலாம் வாங்க.

சமைக்க தேவையானவை

 •  சாதா நூடுல்ஸ்-2பாக்கெட்
 •  கோஸ்-2 கப்
 •  வெங்காயம் நறுக்கியது-2 கப்
 •  பூண்டுபல்-10 பல்
 •  உடைச்சக்கடலை தூள்-1 டீஸ்பூன்
 •  காய்ந்த மிளகாய்–10
 •  கொத்தமல்லி தழை-1/2 கப்
 •  அஜினமோட்டோ-1/4 டீஸ்பூன்
 •  எலுமிச்சை சாறு-2 டீஸ்பூன்
 •  கேசரி பவுடர் -1/4 டீஸ்பூன்
 •  உப்பு தேவையான அளவு
 •  எண்ணை – 75 கிராம்

உணவு செய்முறை : பர்மி அத்தோ

 • Step 1.முதலில் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி(நூடுல்ஸ் மூழ்கும் அளவு) கொதித்ததும் நூடுல்ஸை ஒடித்து போட்டு கேசரி பவுடர் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும். நூடுல்ஸ் வெந்ததும் தண்ணீரை வடித்துவிட்டு வாயகன்ற பாத்திரத்தில் கொட்டி ஆறவிடவும். கடாயில் சிறிது எண்ணை ஊற்றி பூண்டுப்பல்லை சிறிது சிறிதாக நறுக்கி எண்ணையில் பொன் வறுவலாக வறுத்து எடுத்துக்கொள்ளவும். மீண்டும் 50கிராம் எண்ணை ஊற்றி ஒரு கப் வெங்காயத்தை பொன் வறுவலாக வறுத்து எண்ணையோடு வைத்துக் கொள்ளுங்கள்
 • Step 2.ஒரு கப் வெங்காயத்தை பச்சையாக நூடுல்ஸில் போடவேண்டும்.. காய்ந்த மிளகாயை கடாயில் எண்ணை இல்லாமல் லேசாக வறுத்து மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். ஆறின நூடுல்ஸில் மேற்க்கூறிய அனைத்து பொருட்களையும் சேர்த்து ஒன்றாக கலக்கவும். மிளகாய் மட்டும் காரத்திற்க்கு தேவையான அளவு போட்டுக்கொள்ளவும். எலுமிச்சை சாறு கூட தேவையான அளவு ஊற்றிக் கொள்ளலாம். சுவையான அத்தோ ரெடி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here