அத்துமீறல்

தமிழ்நாட்டில் ஊடக சுதந்திரத்தை மிதித்து நசுக்குகின்றன அரசுகள்.

0
453
வருவாய்த் துறை அதிகாரிகள் ஜெயா செய்திகளின் ஒளிபரப்புக்குத் தடங்கலை உருவாக்கியுள்ளார்கள்.

வருமான வரித்துறையினர் சென்னை ஈக்காட்டுதாங்கலிலுள்ள ஜெயா நியூஸ் தொலைக்காட்சியின் அலுவலகத்தில் நவம்பர் 9, 2017 அன்று சோதனை நடத்தினார்கள்; காலை ஆறு மணிக்குச் சோதனை தொடங்கியது. ஊடக அலுவலகங்களில் சோதனை நடத்தும்போது செய்தி ஒளிபரப்பு தடைபடாமல் பார்த்துக்கொள்வதுதான் மரபாக இருக்கிறது. 2013ஆம் ஆண்டு ஜூன் மாதம் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் வருமான வரி சோதனை நடந்தபோது செய்தி ஒளிபரப்பு தடையின்றி நடந்தது. ஆனால் ஜெயா நியூஸ் தொலைக்காட்சியின் செய்தி ஒளிபரப்புக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சுமார் 10 மணி நேரம் தடங்கலை ஏற்படுத்தியிருக்கிறார்கள். இது அத்துமீறல் என்கிற செய்தி வெளியில் பரவிய பின்னர்தான் இந்தச் சட்டவிரோத அடக்குமுறையை மத்திய அரசின் அதிகாரிகள் தளர்த்தியிருக்கிறார்கள்.

மத்திய அரசின் அதிகாரிகள் இந்த அடாவடிக்குப் பதில் சொல்லியாக வேண்டும். ஊடகங்களின் பணி தடையின்றி நடக்க வேண்டும். ஊடக சுதந்திரத்தைப் புதைக்கும் வகையில் தமிழ்நாடு அரசு கார்ட்டூனிஸ்ட் பாலாவைக் கைது செய்தது; திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் செய்தியாளர் ஜெகனைக் கைது செய்தது. மக்களைப் பார்த்து இவர்களுக்குப் பதிலளிக்க வேண்டுமே என்று அரசாங்கம் அஞ்சுவதுதான் ஜனநாயகம்; இங்கு ஜனநாயகம் பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாகி வருகிறது. ஜனநாயகத்தை மீட்டெடுக்க உறுதியேற்போம்.

அன்புச் சொந்தங்களே, கீழேயுள்ள CLICK HERE பொத்தானை அழுத்தி இப்போதுவுக்கு நன்கொடை வழங்குங்கள்; சந்தேகங்களை நிவர்த்தி செய்ய +919445515340ஐ அழையுங்கள்:

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்