ஆஸ்திரேலியாவுக்குஎதிரான 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரை முக்கியமான டெஸ்ட்வீரர்கள் இல்லாத இந்தியக் கிரிக்கெட் அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. இந்தியா, ஆஸ்திரேலியா மட்டுமின்றி ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகின் கவனத்தையும் இந்த டெஸ்ட் ஆட்டம் திசை திருப்பியுள்ளது.
இந்தப் போட்டியில் 2-வது இன்னிங்சில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிஷப் பண்ட் ஆட்ட நாயகன் விருதை பெற்றார்.
ஆட்ட நாயகன் விருதை பெற்ற பிறகு ரிஷப் பண்ட் கூறியதாவது:
என் வாழ்க்கையில் மிகப்பெரிய தருணமாக இந்த வெற்றி இருக்கும். இந்த டெஸ்ட் தொடர் எனக்குக் கனவுத் தொடராக இருந்தது.
இந்திய அணி நிர்வாகம் நான் டெஸ்ட் போட்டிக்குள் இடம் பெற்றதும், அணியில் நீ முக்கியமானவர், மேட்ச் வின்னராக இருக்க வேண்டும், உன்னால் போட்டியை வெல்ல வைக்க முடியும் எனத் தொடர்ந்து எனக்கு ஊக்கமளித்து வந்தனர். இந்திய அணியை வெல்ல வைக்க வேண்டும் என ஒவ்வொரு நாளும் சிந்தித்து வந்தேன். அது இன்று நடந்துவிட்டது என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.