சீனா ராணுவம் அதிவேக தகவல் தொடர்புக்காக லடாக் பிளாஷ் பாயிண்டில் ஆப்டிகல் பைபர் கேபிள்களின் வலையமைப்பை அமைத்து வருவதாக கூறப்படுகிறது.
சீனப் படையினருக்கு பாதுகாப்பான தகவல் தொடர்புகளை வழங்கும் கேபிள்கள் லடாக்கில் உள்ள பாங்காங் த்சோ ஏரியின் தெற்கே காணப்பட்டது. அவர்கள் தெற்கு கரையில் ஆப்டிகல் ஃபைபர் கேபிள்களை அதிவேகத்தில் அமைத்து வருகிறார்கள்.
ஆப்டிகல் பைபர் கேபிள்கள் தகவல் தொடர்பு பாதுகாப்பையும் படங்கள் மற்றும் ஆவணங்கள் போன்ற தரவை அனுப்பும் திறனையும் வழங்குகின்றன என்று முன்னாள் இந்திய ராணுவ உளவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நீங்கள் வானொலியில் பேசினால், அது சிக்கிக் கொள்ளலாம். ஆப்டிகல் ஃபைபர் கேபிள்களில் தொடர்புகள் பாதுகாப்பாக இருக்கும் என்று அவர் கூறினார்.