கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளநிலையில், காங்கிரஸ் கட்சியில் வேட்பாளர்கள் பட்டியல் ஒன்று வெளியாகியிருந்தது. ஆனால் இந்தப் பட்டியல் போலியானது என அம்மாநில காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

மொத்தம் 224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக மாநில சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக, மே மாதம் 12ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சி உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் வரும் ஏப்.17ஆம் தெதி தொடங்கி ஏப்.24ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. ஒவ்வொரு கட்சிகளும், தங்களது வேட்பாளர்களைத் தேர்வு செய்வதில் வேகப்படுத்தி வருகின்றன. இதில் பாரதிய ஜனதா கட்சி, முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு விட்டது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் பட்டியல் ஒன்று வெளியானது. இந்தப் பட்டியல் சமூக வலைத்தளங்களிலும் பரவத் தொடங்கியது. ஆனால் இந்தப் பட்டியல் போலியானது என்றும், இன்னும் வேட்பாளர்கள் தேர்வு இறுதி செய்யப்படவில்லை எனவும் அம்மாநில காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் தலைவரும், அம்மாநில முதல்வருமான சித்தராமையா, “தற்போது வலம் வரும் இந்த பட்டியல் போலியானது. இன்னும் வேட்பாளர்கள் யாரும் தேர்வு செய்யப்படவில்லை.” என தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்: தமிழ்த்தாய் வாழ்த்து பாடலின் போது நடிகர் விஜய் உட்கார்ந்திருந்ததாக சர்ச்சை (வீடியோ)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here