அதிரடி விலை குறைப்பில் கிடைக்கும் சாம்சங் ஸ்மார்ட்போன்கள்

0
318

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி நோட் 20 மற்றும் நோட் 20 அல்ட்ரா ஸ்மார்ட்போன்களை கடந்த மாதம் அறிமுகம் செய்தது.

இந்தியாவில் விற்பனைக்கு வந்த இதன் 8 ஜிபி + 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 77,999 என நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி நோட் 20 மாடலின் விலையை தற்காலிகமாக குறைப்பதாக அறிவித்து உள்ளது. சாம்சங் டேஸ் விற்பனையில் கேலக்ஸி நோட் 20 ஸ்மார்ட்போன்ரூ. 68,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

அந்த வகையில் இந்த ஸ்மார்ட்போனிற்குரூ. 9 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் ஹெச்டிஎஃப்சி வங்கிகார்டு பயன்படுத்துவோருக்கு ரூ. 6 ஆயிரம் கேஷ்பேக் வழங்கப்படுகிறது. ஆகமொத்தம் ரூ.15,000 என்கிற தள்ளுபடி கிடைக்கிறது. தள்ளுபடி மற்றும் கேஷ்பேக் தொகையை சேர்க்கும் பட்சத்தில் கேலக்ஸி நோட் 20 மாடலை ரூ. 62,999 விலையில் வாங்கிடலாம்.

ஏற்கனவே நடைபெற்று வரும் ‘சாம்சங் டேஸ்’ விற்பனையின் ஒரு பகுதியாக இந்த சலுகை கிடைக்கிறது. புதிய தள்ளுபடி மற்றும் கேஷ்பேக் சலுகைசெப்டம்பர் 23 ஆம் தேதி வரை வழங்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here