சாம்சங் நிறுவனம், கேலக்ஸி ஏ9 (2018) ஸ்மார்ட்போனின் விலையை மீண்டும் குறைத்துள்ளது. முன்னர் ரூ.3,000 குறைக்கப்பட்டு ரூ.33,990 விலையில் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், தற்போது மீண்டும் விலை குறைக்கப்பட்டு ரூ.30,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. கேலக்ஸி ஏ9 (2018) இந்தியாவில் ரூ.36,990 விலையில் அறிமுகமானது.

கேலக்ஸி ஏ9 (2018) ஸ்மார்ட்போனின் சிறப்பம்சமே நான்கு கேமரா சென்சார் கொண்ட சாம்சங் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன் ஆகும். இதில் வழக்கமான கேமரா சென்சார், வைடு-ஆங்கிள் சென்சார், டெலிஃபோட்டோ சென்சார் மற்றும் டெப்த் சென்சார் உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கிறது.

இவ்விலை குறைப்பு அந்நிறுவனம் புதிய 2019 கேலக்ஸி ஏ9 ஸ்மார்ட்போனினை வெளியிட இருப்பதை உணர்த்துவதாக தெரிகிறது.

சாம்சங் கேலக்ஸி ஏ9 (2018) ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் AMOLED ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளது. ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளம், ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர் ஆகியவை சிறப்பூட்டுகின்றன. இது 6 ஜி.பி ரேம், 8 ஜி.பி ரேம் என இரண்டு வெரியண்ட்களில் வருகிறது. 128 ஜி.பி உள்ளடங்கிய மெமரி மற்றும் மெமரியை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. கூடவே டூயல் சிம் ஸ்லாட் வசதியும் உண்டு.

புகைப்படங்களை எடுக்க 24 எம்.பி சென்சார், f/1.7, 10 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், f/2.4, 8 எம்.பி. அல்ட்ரா வைடு லென்ஸ் மற்றும் 5 எம்.பி கேமரா டெப்த் விவரங்களை படம்பிடிக்க ஏதுவாக வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 24 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0 அப்ரேச்சர் கொண்டுள்ளது.

மேலும் பின்புறம் கைரேகை சென்சார் மற்றும் 3800 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

சாம்சங் இந்தியா அதிகாரப்பூர்வ வலைதளத்தில் கேலக்ஸி ஏ9 (2018) ஸ்மார்ட்போனின் புதிய விலை ஏற்கனவே அமலாகிவிட்டது. சமீபத்திய விலை குறைப்பு நிரந்தரமானது தான் என கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்