சுகாதாரத்துறை முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் உதவியாளர்கள் சரவணன் மற்றும் முருகன் ஆகியோரின் வீடு உள்ளிட்ட நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புதுறையினர் சேதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனை சென்னையில் மூன்று இடங்களிலும், சேலத்தில் ஒரு இடத்திலும் நடத்தப்பட்டு வருகிறது.

முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது ஏராளமான ஆவனங்களை கைப்பற்றப்பட்டது. அந்த சோதனை சென்னை, புதுக்கோட்டை, காஞ்சிபுரம், திருச்சி, கோவை உள்ளிட் 6 மாவட்டங்களில் நடைபெற்றது. 100க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறையினர் இந்த சோதனையில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே இலுப்பூரில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களிலும் லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி சோதனை நடத்தினர். திருச்சி எட மலைப்பட்டி புதூரில் உள்ள விஜயபாஸ்கரின் சகோதரர் உதயகுமார் குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பிலும் சோதனை நடத்தப்பட்டது.

சென்னை சேத்துபேட்டில் உள்ள விஜயபாஸ்கர் வீட்டிலும், செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே புதுப்பட்டினம் பகுதியில் உள்ள விஜயபாஸ்கரின் சகோதரி வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். விஜயபாஸ்கர், அவரது மனைவி ரம்யா மீது, 2013-2021 ஆண்டுகளில் வருமானத்தைவிட அதிகளவு சொத்து குவித்தாக வழக்கு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

விஜயபாஸ்கர் அமைச்சராக இருந்த காலகட்டத்தில் தனது மனைவி பெயரில் பொருந்தாத வகையில் ரூ. 27.22 கோடிக்கு சொத்து சேர்த்திருப்பதாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டது. விஜயபாஸ்கர் அமைச்சராக இருந்த காலகட்டத்தில் பெறப்பட்ட லஞ்சப்பணத்தில் கல்வி நிலையங்களை தொடங்கியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.

அப்போது, கோவையில் உள்ள விஜயபாஸ்கரின் மாமனார் சுந்தரத்தின் இல்லத்தில், 15 மணி நேரம் நடைபெற்ற சோதனையில் ஏராளமான ஆவணங்களை அதிகாரிகள் எடுத்து சென்றனர். இந்நிலையில், விஜயபாஸ்கர் தொடர்புடைய நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே இந்த இடங்கள் பூட்டி சீல் வைக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here