அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் அணியினர் ஒன்றாக இணைந்ததை அடுத்து, செவ்வாய்க்கிழமை (செப்.12) அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. பொதுக்குழு கூட்டுவதற்கு கட்சியின் பொதுச்செயலாளர் மற்றும் துணைப் பொதுச்செயலாளருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்பதால் செவ்வாய்க்கிழமை கூடவுள்ள பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என டிடிவி தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேல் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

இந்த மனு மீதான விசாரணை திங்கட்கிழமை (இன்று) நடைபெற்றது. விசாரணையின் முடிவில், மனுவினைத் தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், வெற்றிவேலுக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்தும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனையடுத்து இத்தீர்ப்புக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவினை விசாரித்த சென்னை உய்ர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு, அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு அனுமதியளித்து உத்தரவிட்டது. முன்னதாக பொதுக்குழு கூட்டத்திற்கு பெங்களூரு உரிமையியல் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.

இதையும் படியுங்கள்: ”ரோஹிங்யா முஸ்லிம்களை இந்தியா வெளியேற்ற கூடாது”: ஜவாஹிருல்லா

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்