சென்னையில் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்படலாம் எனக் கூறப்படுகிறது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் அணியினர் ஒன்றாக இணைந்ததை அடுத்து, செவ்வாய்க்கிழமை (இன்று) அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது.

பொதுக்குழு கூட்டுவதற்கு கட்சியின் பொதுச்செயலாளர் மற்றும் துணைப் பொதுச்செயலாளருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்பதால் பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என டிடிவி தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேல், தொடர்ந்த வழக்கில், பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடத்த எந்தவித தடையும் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்து விட்டது.

மேலும் இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை அக்டோபர் 23ஆம் தேதி நடைபெறும் எனவும் உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

admk

சென்னை வானகரத்தில் நடைபெறும் இந்த பொதுக்குழுவில் கலந்துகொள்ள 2,140 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. செயற்குழு கூட்டத்தில் கலந்துகொள்ள 296 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பொதுக்குழு கூட்டத்தில், சசிகலா கட்சியின் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்: ”ரோஹிங்யா முஸ்லிம்களை இந்தியா வெளியேற்ற கூடாது”: ஜவாஹிருல்லா

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்