அதிமுக – பாஜக கூட்டணிக்கு தேமுதிக வருமா? என்ற கேள்விக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேரடியாக பதில் அளிக்க மறுத்துவிட்டார்.

சென்னையை அடுத்த வண்டலூரில் இன்று நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார்.

இதையடுத்து முன்னேற்பாடுகளைக் கவனிக்க மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இன்று காலை சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பியூஷ் கோயல், தமிழகத்தில் உள்ள 40 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும்.

பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வந்தாலும், தேர்தல் பிரசாரத்தில் நாங்கள் தீவிரம் காட்டுகிறோம். கடந்த 5 ஆண்டுகளில் நாடு அடைந்துள்ள வளர்ச்சி பற்றி நாட்டு மக்களுக்குத் தெரியும்.

தனது அரசின் சாதனைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி பேசுவதைக் கேட்க தமிழக மக்கள் ஆர்வமாக உள்ளனர் என்று கூறினார்.

அப்போது, தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தேமுதிக வர வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு ஆச்சரியங்கள் நடக்க வாய்ப்புள்ளது. அந்த ஆச்சரியத்துக்காக காத்திருக்கிறோம் என்று அவர் பதிலளித்தார்.

அதிமுக – பாஜக கூட்டணிக்கு தேமுதிக வருமா என்ற கேள்விக்கு நேரடியாக பதிலளிக்காமல் மறைமுகமாக பதிலளித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here