அதிமுக கூட்டணி திமுக கூட்டணியை டெபாசிட் இழக்கச் செய்யும் – எடப்பாடி

0
212

திமுக அமைத்துள்ளது மெகா கூட்டணி என்றும், திமுக கூட்டணியை டெபாசிட் இழக்கச் செய்யும் அளவுக்கு அதிக வாக்கு வங்கியுள்ள கூட்டணி என்றும் முதலமைச்சர் கூறியுள்ளார்.

ஆரணி மக்களவை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் செஞ்சி ஏழுமலையை ஆதரித்து, செஞ்சி நான்குமுனை சந்திப்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்தார். ஆரணி வேட்பாளர் செஞ்சியை சேர்ந்தவர் என்பதால், அப்பகுதி மக்கள் எப்போது வேண்டுமானாலும் அவரை சந்திக்கும் பாக்கியம் பெற்றிருப்பதாகவும் அவர் கூறினார்.

கடந்த தேர்தலில் 39 தொகுதிகளில் வென்ற கட்சிகள் சேர்ந்து அமைத்துள்ள தங்கள் மெகா கூட்டணி, திமுக கூட்டணியை டெபாசிட் இழக்கச் செய்யும் அளவுக்கு வலிமையுடையது என முதலமைச்சர் குறிப்பிட்டார்.

ஆரணி தொகுதி பெருமளவு விவசாயத்தை நம்பியுள்ள பகுதி என்பதை சுட்டிக்காட்டிய முதலமைச்சர், குடிமராமத்து உள்ளிட்ட விவசாயிகளின் நலன்களுக்காக செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்களை பட்டியலிட்டார். ஓடைகள், ஆறுகள் தோறும் தடுப்பணைகள் கட்டி உபரிநீரை தேக்கி, நிலத்தடி நீரை பெருக்கி பாசனத்திற்கு பயன்படச் செய்வோம் என்றும் அவர் உறுதியளித்தார்.

திண்டிவனத்திற்கு அருகே ஆயிரம் ஏக்கரில் உணவுப்பூங்கா அமைக்கப்படுவதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படும், பொருளாதார நிலை உயரும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

நந்தன் கால்வாய் திட்டம் முழுமையாக சீரமைக்கப்பட்டு விரைவில் நிறைவேற்றப்படும், திண்டிவனம்-கிருஷ்ணகிரி சாலையை நான்கு வழி சாலையாக தரம் உயர்த்தும் பணிகள் விரைவில் முடிக்கப்படும் என முதலமைச்சர் உறுதியளித்தார்.

ரூ.1,000 கோடிமதிப்பில்விவசாயபூங்கா

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் ஆயிரம் கோடி ரூபாய் செலவில் விவசாய பூங்கா அமைக்கப்படும் என்று அங்கு பிரச்சாரம் மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ஆரணி வேட்பாளர் செஞ்சி சேவல் ஏழுமலைக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த அவர், செஞ்சி பகுதியில் உள்ள அனைத்து ஏரிகளின் நீர்நிலைகளுக்கும் தடுப்பணைகள் கட்டப்படும் என்ற அவர், நந்தன் கால்வாய் திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படும் என்றும் தெரிவித்தார்.

முன்னதாக முதலமைச்சர் வருகையை ஒட்டி மகாத்மா காந்தி சிலை அருகே ஆடல் பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here