நீண்ட இழுபறியில் இருந்துவந்த அதிமுக – தேமுதிக கூட்டணி உடன்பாடு இறுதியாக நேற்று(ஞாயிற்றுக்கிழமை) முடிவிற்கு வந்தது.

மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக-வுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான ஒப்பந்தத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி கே. பழனிசாமி, தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோர் கையெழுத்திட்டு, ஒப்பந்தத்தை பரிமாறிக்கொண்டனர்.

மக்களவைத் தேர்தலோடு தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவளிக்கவும் தேமுதிக ஒப்புக்கொண்டுள்ளது.

அதிமுக கூட்டணியில் முதலில் இடம்பிடித்த பாமகவுக்கு 7 மக்களவை தொகுதிகளும், ஒரு மாநிலங்களவை எம்.பி. சீட்டும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதன்பின்னர் இடம்பெற்ற பாஜகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here