அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ்ஸும், இணை ஒருங்கிணைப்பாளராக இபிஎஸ்ஸும் போட்டியின்றி தேர்வானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுகவின் கட்சி விதிகள் திருத்தப்பட்டு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரை அடிப்படை உறுப்பினர்களே தேர்வு செய்வர் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளருக்கான தேர்தல் டிசம்பர் 7ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.

EPS_OPS_AIADMK_Executive_Meeting_Photo

இதற்கான வேட்புமனு தாக்கல் டிசம்பர் 3, 4 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் மட்டுமே மனுத்தாக்கல் செய்திருந்தனர். இவர்கள் இருவருக்கும் ஆதரவாக நிர்வாகிகள் பலர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்றதையடுத்து, வேறுயாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அப்பதவிகளுக்கு போட்டியின்றி தேர்வானதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here