அதிமுகவை காப்பாற்றுவேன் என பிப்ரவரி 24 மாலை 6 மணிக்கு வீடுகளில் தீபம் ஏற்றுங்கள்- இபிஎஸ்-ஓபிஎஸ் கடிதம்

0
178

அதிமுகவை காப்பாற்றுவேன்’ என பிப்ரவரி 24 அன்று மாலை 6 மணிக்கு தீபம் ஏற்றி உறுதியேற்குமாறு கட்சியினருக்கு ஓபிஎஸ் – இபிஎஸ் கடிதம் எழுதியுள்ளனர்.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “ஜெயலலிதா மறைந்தாலும் அவரது ஆத்மா நம்மை பார்த்துக்கொண்டிருக்கிறது என நம்புகிறோம். அவரது உழைப்பாலும் தியாகத்தாலும் வளர்த்த இயக்கத்தில் நன்மை செய்வோம். அதிமுகவை மீண்டும் மீண்டும் ஆட்சியில் அமரவைக்கும் மக்களுக்குத்தான் இயக்கம் சொந்தம். அதிமுகவை விலை கொடுத்தோ, வசைபாடியோ, வசியப்படுத்தியோ வாங்க முடியாது. எதிரிகளும் துரோகிகளும் கைக்கோர்த்துக்கொண்டு நம் படையை வீழ்த்தும் நோக்கில் செயல்படுகின்றனர். உழைப்பு, உத்வேகம், ஒற்றுமை உணர்வால் அவர்களை தோற்கடித்து விரோதிகளுக்கு பாடம் கற்பிடிக்க வேண்டும். நல்லாட்சி பெற்ற மக்களும், நண்பர்கள் பலரும் நம் பக்கம் இருக்கிறார்கள். நம் விசுவாசம் அதிமுகவுக்கும், மக்களுக்கும் மட்டுமே சொந்தம்.

அதிமுகவை காப்பாற்றுவேன் என ஜெயலலிதா பிறந்த நாளான பிப்ரவரி 24 அன்று மாலை 6 மணிக்கு வீடுகளில் தீபம் ஏற்றி உறுதியேற்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here