அதிமுகவை அக்கட்சியினரே அழித்துவிடுவார்கள் என மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

அதிமுக அம்மா அணி துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் அவரது உறவினர்கள், ஆதரவாளர்கள் உள்ளிட்டவர்களுக்குச் சொந்தமான 150க்கும் மேற்பட்ட இடங்களில், கடந்த வியாழக்கிழமை (நவ.9) முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனை ஐந்து நாட்கள் வரை நீடித்தது.

இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தவறு செய்பவர்கள் தப்ப முடியாது என்றும், ஊழல் செய்ய பாரதிய ஜனதா கட்சி தூண்டியதும் இல்லை, ஊழல் செய்தவர்களைத் தண்டிக்காமல் விட்டதும் இல்லை என்றார். மேலும் அவர், அதிமுகவை வேறு யாராலும் அழிக்க முடியாது என்றும், அக்கட்சியினரே அதனை அழித்துவிடுவார்கள் என்றும் தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்: துல்லியம், நியாயம், ஆதாரம்: ஊடகவியலின் அடிப்படைகள்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்