அதிமுக ஆட்சியில் நடைபெறும் ஊழல்களுக்கு, மத்திய அரசு துணையாக இருந்து இரட்டை குழல் துப்பாக்கியாக செயல்படுகிறது என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

அதிமுகவும், பாரதிய ஜனதா கட்சியும் இரட்டை குழல் துப்பாக்கி போல செயல்படுவதாக அதிமுக நாளேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டையில் இது குறித்து செய்தியாளரகளிடம் பேசிய ஸ்டாலின் ”அவர்கள் இரட்டை குழல் துப்பாக்கியாக செயல்படுவது உண்மைதான். ஆனால், எந்தவகையில் என்று கேட்டால், ஏழை – எளிய, கிராமப்புற மக்கள் மருத்துவக் கல்வியை பெற முடியாத வகையில் நீட் தேர்வை கொண்டு வந்து அற்புதமான காரியத்தை செய்வதில் இரட்டை குழல் துப்பாக்கியாக செயல்பட்டு இருக்கிறார்கள். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகும், அதை அமைக்க முடியாது என மத்திய அரசு பிடிவாதம் பிடித்துக் கொண்டிருக்கிறது.

stalin

அதற்கு ஒத்து ஊதுகின்ற, அடிமைத்தனமாக நடக்கும் அதிமுக ஆட்சி இரட்டை குழல் துப்பாக்கியாக செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். இந்த ஆட்சியில் அடித்துக் கொண்டிருக்கின்ற கொள்ளைகளுக்கு, ஊழல்களுக்கு, கலெக்‌ஷன், கமிஷன் கரப்ஷன் ஆகியவற்றுக்கு மத்திய அரசு துணையாக இருந்து இரட்டை குழல் துப்பாக்கியாக செயல்படுகிறது.

வருமான வரித்துறை சோதனைகள் நடந்து முடிந்தும், ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, பிஜேபியும், அதிமுகவும் சேர்ந்து கூட்டுக் கொள்ளையை, கூட்டுச்சதியை இரட்டை குழல் துப்பாக்கிகளாக சேர்ந்து செய்திருக்கிறார்கள். எனவே, அவர்கள் இரட்டை குழல் துப்பாக்கியாக செயல்படுவதாக தெரிவித்து இருப்பது நூற்றுக்கு நூறு சதவிகிதம் உண்மைதான்.” என்றார்.

இதையும் படியுங்கள்: உங்கள் ராணுவ வலிமையெல்லாம் வெறும் கண்காட்சிக்குத்தானா?

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்