அதிமுகவில் பிளவு என்பதே கிடையாது என மக்களவை துணைச் சபாநாயகரும், அதிமுக அம்மா அணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான தம்பிதுரை கூறியுள்ளார்.

துணை ஜனாதிபதி பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வதற்காக டெல்லி சென்றிருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடியையும் சந்தித்துப் பேசியிருந்தார். மேலும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் திங்கட்கிழமை (நாளை) பிரதமர் மோடியைச் சந்திக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனிடையே அதிமுகவை ஒன்று சேர்க்கும் முயற்சியில் பிரதமர் மோடி கட்டப்பஞ்சாயத்து செய்து வருவதாக தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திருநாவுக்கரசர் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய தம்பிதுரை, அதிமுகவின் பொதுச்செயலாளர் யார் என்பது அனைவருக்கும் தெரியும் என்று தெரிவித்தார். மேலும் அவர், எந்த கட்சியையும் யாரும் கட்டுப்படுத்த முடியாது என்றும், அதிமுகவில் பிளவு என்பதே கிடையாது என்றும் தெரிவித்தார். கருத்து வேறுபாடு காரணமாக சிலர் பிரிந்து செயல்படுவதாகவும் அவர் குறிப்பிட்டர்.

இதையும் படியுங்கள்: ”நீதிபதிக்கே பாதுகாப்பில்லாத இலங்கைக்கு எப்படித் திரும்புவோம்?”

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்