பொள்ளாச்சி சம்பவம் தொடர்பாக புதிதாக 4 வீடியோக்கள் வெளியீடு பெண்களை பலாத்காரம் செய்யும் இந்த வீடியோவில் பார் ஆறுமுகம் உள்ளார் என்று வீடியோவை ஆதாரமாக வைத்துக் கொண்டு பார் ஆறுமுகத்தை கைது செய்ய கோரிக்கை வலுத்து வருகிறது .

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டிய வழக்கில் பொள்ளாச்சி மக்கள் தங்களது எதிர்ப்பை காட்ட ஆரம்பித்துவிட்டனர் .

மேலும் பொள்ளாச்சி சம்பவம் தொடர்பாக புதிதாக 4 வீடியோக்கள் வெளியாகி உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. ஒரே ஒரு பெண்ணைத் தவிர வேறு யாரும் இது குறித்து புகார் கொடுக்க முன் வராத நிலையில், அப்படி வரக் கூடாது என்பதற்காகவே இது தொடர்பான விடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறதா என்ற ஐயமும் எழுகிறது.

நேற்று நீதிமன்றத்துக்கு வந்த முக்கியக் குற்றவாளி திருநாவுக்கரசின் தாய், மகன் பற்றி கேள்வி எழுப்பும் பொதுமக்களிடம், அவர் சற்றும் குற்ற உணர்ச்சி இல்லாமல் வாய்ச்சவடால் கொடுப்பதும் பார்ப்பவர்களை கொதிப்படையச் செய்தது.

இந்த நிலையில், கோவை மாவட்டம் பொள்ளாச்சி, உடுமலை, திருவண்ணாமலை போன்ற இடங்களில், பொள்ளாச்சி சம்பவத்துக்குக் காரணமானவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி கல்லூரி மாணவ, மாணவிகள் ஏராளமானோர் வகுப்புகளைப் புறக்கணித்துவிட்டு கபோராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே பொள்ளாச்சியில், சமீபத்தில் ஆபாச விடியோ சம்பவத்தில் புகார் அளித்தவரை தாக்கியதாகக் குற்றம்சாட்டப்பட்டு அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நாகராஜனின் பாருக்குள் புகுந்து 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

பொள்ளாச்சி கோட்டூர் ரோட்டில் உள்ள நாகராஜனுக்கு சொந்தமான பாருக்குள் இருந்த பொருட்கள் மற்றும் மதுபானங்களையும் பொதுமக்கள் அடித்து நொறுக்கியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here