அதிமுகவின் 90 சதவீதம் தொண்டர்கள் என்னுடன் தான் இருக்கிறார்கள் – டிடிவி தினகரன்

0
733

ஜெயலலிதாவின் 90 சதவீதம் தொண்டர்கள் என்னுடன் தான் இருக்கிறார்கள் என்றும் ஆட்சி, அதிகாரத்தில் இருப்பதால் அதிமுக உயிரோடு இருக்கிறது என அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன் , சேலம் – சென்னை பசுமை வழிச்சாலை குறித்து மக்களிடம் கருத்துகளை கேளுங்கள் என்று அரசியல் தலைவர்கள் கூறியிருப்பதை அரசு கண்டு கொள்ளாமல், மக்களை துண்புறுத்தி வருகிறது.

பசுமை வழிச்சாலையை எதிர்பதில் எங்கள் வீரியம் குறையவில்லை. திருவண்ணாமலை மற்றும் அரூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்தற்கு போலீஸ் அனுமதி வழங்கவில்லை. நீதிமன்றத்திற்கு சென்று அனுமதி பெறுவோம். நிச்சயமாக போராட்டம் நடக்கும் என்றார்.

மேலும், தமிழகத்தில் அரசு ஒன்று இருப்பதாக மக்கள் யாரும் கருதவில்லை என்றவர் ஜெயலலிதாவின் 90 சதவீதம் தொண்டர்கள் என்னுடன் தான் இருக்கிறார்கள்.

ஆட்சி, அதிகாரத்தில் இருப்பதால் அதிமுக உயிரோடு இருக்கிறது என்றும் ஆட்சியில் இருந்து இறங்கியதும் அனைவரும் எங்களிடம் வருவார்கள் என தினகரன் கூறினார்.