அதிமுகவின் முக்கிய வேட்பாளரை விரட்டி அடித்த கிராம மக்கள் ஏன்? எதற்கு?

0
153


அதிமுகவின் முக்கிய வேட்பாளர் ஒருவரை, கிராம மக்கள் தங்கள் கிராமத்துக்குள் பிரசாரம் செய்ய விடாமல் விரட்டியடித்த சம்பவம் நடந்துள்ளது.

கரூர் மாவட்டம் லந்தகோட்டை எனும் கிராமத்துக்கு இன்று அதிமுக வேட்பாளர் தம்பிதுரை தேர்தல் பிரசாரத்துக்காக வந்துள்ளார்.

ஆனால், அந்த கிராமத்தில் பல ஆண்டுகளாக குடிநீர் பிரச்னை இருக்கும் நிலையில், அதனை தீர்க்க நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டி கிராம மக்கள் தம்பிதுரைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால், அந்த கிராமத்துக்குள் பிரசாரம் செய்ய முடியாமல் தம்பிதுரை திரும்பி வந்தார். 
 

Courtesy : https://www.dinamani.com/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here