அதிமுகவினரிடம் பணத்தை வாங்கிக் கொண்டு அவர்களை ஏமாற்றுங்கள் – ஈவிகேஎஸ் இளங்கோவன்

0
178


திமுக கூட்டணி சார்பில் தேனி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் ஈவிகேஎஸ் இளங்கோவன் மதுரையில் பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் கூறியதாவது, தேர்தலில் நிச்சயம் வெற்றி பெற்றாக வேண்டும் என்று ஆளுங்கட்சியினர் மக்களுக்கு பணம் கொடுத்து வருகிறார்கள். ஒரு வாக்குக்கு ரூ.500 கொடுத்து வருகிறார்கள். மக்களே அதை வாங்காதீர்கள். தேனி தொகுதியில் போட்டியிடும் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்திடம் ஒரு ஓட்டுக்கு ரூ.5 ஆயிரம் கேளுங்கள். அவர்கள் கொடுக்கும் பணம் அனைத்தும் மக்களை ஏமாற்றி கோடி கோடியாய் சேர்த்த சொத்துகள்தான். அனைத்தும் மக்கள் பணம்தான் என்று இளங்கோவன் கூறியுள்ளார்.

அதோடு நின்றுவிடவில்லை. ஆளுங்கட்சியினர் நம்மை எப்படியெல்லாம் ஏமாற்றியிருக்கிறார்கள். எனவே, அவர்களிடம் பணத்தை வாங்கிக் கொண்டு அவர்களை ஏமாற்றுங்கள். அதிமுகவிடம் பணத்தை வாங்கிக் கொண்டு கை சின்னத்தில் வாக்களித்து எங்களை வெற்றி பெறச் செய்யுங்கள். தேனி தொகுதியில் நான் வெற்றி பெற்று மக்களவை உறுப்பினரானால் அனைத்து அடிப்படை வசதிகளையும் உடனடியாக செய்து தருவேன் என்று கூறியிருக்கிறார்.
 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here