அதிநவீன சிறப்பம்சங்களுடன் வெளிவரும் அசுஸ் ரோக் போன் 2

0
301

அசுஸ் நிறுவனத்தின் ரோக் போன் 2(ROGPhone2)  சிறப்பம்சங்கள் வெளியாகியுள்ளது. இது அந்நிறுவனம் கடந்த ஆண்டு வெளியிட்ட ரோக் போனின் மேம்படுத்தப்பட்ட மாடல் ஆகும். கடந்த ஆண்டை போன்றே இம்முறையும் அசுஸ் தனது ஸ்மார்ட்போனில் அதிநவீன சிறப்பம்சங்களை வழங்கியுள்ளது.

அந்த வகையில் அசுஸ் ரோக் போன் 2 மாடலில் 6.59 இன்ச் AMOLED ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளது. இது 120 ஹெர்ட்ஸ் ரிஃப்ரெஷ் ரேட் மற்றும் 2340×1080 பிக்சல் ரெசல்யூஷன் கொண்டுள்ளது. இத்துடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர், அட்ரினோ 640 GPU, 12 ஜி.பி. ரேம் மற்றும் 512 ஜி.பி. UFS 3.0 ஸ்டோரேஜ் வழங்கப்பட்டுள்ளது.

புதிய அசுஸ் ரோக் போன் 2 கருப்பு நிறத்தில் கிடைக்கிறது. சர்வதேச சந்தையில் இந்த ஸ்மார்ட்போன் செப்டம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here