(அக்டோபர் 10, 2016 அன்று வெளியான செய்தி , மறுபிரசுரமாகிறது )

1.குடித்துவிட்டு வாகனம் ஓட்டுதல்
முதல் காரணியாக இப்பட்டியலில் வருவது மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டுதல். மது ஒருவரின் வாகன இயக்க கட்டுபாட்டை இழக்க செய்யும். இதில் பெரும்பாலும் கார்களில் ஏற்படும் விபத்துகளே அதிகம் என்கின்றது ஓர் ஆய்வு.

2.நீரில் மூழ்குதல்
பாதுகாப்பற்ற படகு சவாரிகளால் ஏற்படும் மரணங்கள் இரண்டாவது இடத்தில் உள்ளன. பொழுதுபோக்கு படகு சவாரிகளின் போது உயிர்கவசம் அணியாமல் பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது.

3.துரித உணவு
உணவே மருந்து என்பர் ஆனால் இன்றைய உணவு முறை மாற்றத்தால் பல உடல்நலக் கோளாறுகள் ஏற்படுகிறது. உடல் பருமன் என்பது வளரும் குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு பெரும் பிரச்சனையாக உள்ளது. இது போன்ற ஆரோக்கியமற்ற அதிவேக உணவுகளால் இதய சார்ந்த நோய்கள் மற்றும் பக்கவாதம் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் அதிகம்.

4.சிகரெட்
புகையிலை பொருட்களை உட்கொள்வது உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் என்பது தெரிந்தும் பலர் அதை பயன்படுத்தி வருகின்றனர். சிகரெட் பிடிப்பதனால் நுரையீரல் புற்றுநோய் மற்றும் நுரையீரல் சார்ந்த பல்வேவருவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதனால் பல மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

5.மது

மது குறைவாக அருந்துவது ஆரோக்கியம் என்று கூறப்பட்டாலும் அதுவே அளவிற்கு அதிகமாகும் வேளையில் உயிர்க்கு ஆபத்தை ஏற்படுத்தி விடுகிறது. அளவிற்கு அதிகமாக மது உட்கொள்வதால் புற்றுநோய், இதய கோளாறுகள், நுரையீரல் கோளாறுகள் மற்றும் பல்வேறு விபத்துகள் நேர்வாதாக கூறப்படுகிறது.

6.தற்கொலை
தற்கொலை கோழைத்தனம் என கூறப்பட்டாலும் உணர்ச்சியின் எழுச்சியால் பலர் அதை செய்கின்றனர். மேலும் இதில் ஈடுபடுவோரில் ஆண்களே அதிகம் என்கிறது ஆய்வு அறிக்கை.

7.செல்பி
இது வேடிக்கையாக ஆரம்பித்து வினையாக பலரது வாழ்வில் முடிவடைந்துள்ளது. பலர் உயரமான இடங்களின் மேல் நின்றுகொண்டும், கிணற்றில் ஆழம் தெரிய செல்பி எடுக்க எண்ணியும், ரயில் வரும் நேரங்களில் தண்டவாளங்களில் நின்று கொண்டு எடுத்தும் மரணத்தைச் சந்தித்தோர் ஏராளம்.

8.கேன்சர்
கேன்சர் காரணமாக பலர் வருடந்தோறும் உயிரிழக்கின்றனர். இந்நோயின் அதிகமான சிகிச்சை காரணமாக பலர் சிகிச்சை பெறாமல் உயிரிழப்பது கூடுதல் அதிர்ச்சி.

9.கருப்பாக இருத்தல்
கருப்பு ஒரு தீண்டாதகாத ஒன்றாக தான் இந்த சமூகம் பார்க்கிறது. இது போன்ற ஒதுக்குதலை தாங்க இயலாமல் தாழ்வுமனப்பான்மையால் பலர் தற்கொலை செய்து கொள்கின்றனர். இது ஒரு புறம் இருக்க அமெரிக்காவில் கருப்பின மக்களின் உயிர் விளையாட்டு பொருளாகவே உள்ளது. கருப்பர்கள் மீதான தாக்குதல் அமெரிக்காவில் அதிகமாக உள்ளது.

10.சளி மற்றும் காய்ச்சல்
இதன் மூலம் உயிரிழப்பா என்று தோன்றலாம். ஆனால் இது வயதானவர்கள் போன்று ஆரோக்கிய குறைபாடு உள்ளோரை விரைவில் பாதிக்கக்கூடும்.

11.ஆயுதப்படை
ஆயுதப்படை தாக்குதல்களின் போது நிகழும் மரணங்கள் 11 வது இடத்தில் உள்ளது.

12. இளம் பருவத்தினர் மரணம்

வயதானவர்களின் இறப்பு விகித்தை விட இது அதிகம். இளம் பருவத்தினர் வயதின் காரணமாக மது, புகையிலை பொருட்கள் உட்கொள்ளுதல், அதிவேகமான இரு சக்கர பயணங்கள் இதில் அடக்கம்.

13.நோய்த்தடுப்பு மருந்து எடுத்து கொள்ளாமை
குழந்தைகளுக்கு தேவையான நோய்த்தடுப்பு மருந்துக்கள் எடுத்துக் கொள்ளாமை பல உடல்நல குறைபாடுகளை ஏற்படுத்தும். சில சமயம் இது மரணம் நேரிட கூட வழி வகுக்கிறது.

14.மின்னல்

மழை பெய்யும் பொழுதில் தோன்றும் மின்னல்களின் காரணமாக பல மரணங்கள் நிகழ்ந்துள்ளன. அதிக பட்சமான ஒளியினால் கண் பார்வை பாதிக்கக்கூடும்.

15.கவனக்குறைவு
கவனக்குறைவினால் நிகழும் மரணங்கள் 15வது இடத்தில் உள்ளது. பல இடங்களில் உள்ள முன்னெச்சரிக்கை கருவிகள், பாதுகாப்பு கருவிகள் மற்றும் முதலுதவி கருவிகள் வெறும் வேடிக்கை பொருளாக தான் உள்ளது. இது பயன்பட்டிற்கு உகந்ததாக இருந்தால் பல விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் தடுக்கப்படும்.

16.காலமாற்றம்
காலநிலை மாற்றம் காரணமாக மரணங்கள் நிகழ்கின்றன. திடீர் மழை மற்றும் அதிக படியான வெப்பம் போன்ற காரணிகள் காரணமாக பலர் பாதிக்கப்படுகின்றனர்.

17.தீவிரவாதம்
பல தாக்குதல் இருப்பினும் தீவிரவாதம் 17வது இடத்தில்தான் உள்ளது. தீவிரவாத தாக்குதல்களை விட தன்னிசையான அக்கறையற்ற நிகழ்வுகளால் தான் பெரும் மரணங்கள் நிகழ்கின்றன்.

18.நீரிழிவு நோய்
நீரிழிவு நோய் காரணமாக நிகழும் மரணங்கள் 18வது இடத்தில் உள்ளன. நீரிழிவு நோய் காரணமாக பல்வேறு நோய்கள் தாக்கக்கூடும். அதில் கண் பார்வை, இதய நோய்களின் தாக்குதலுக்கு வாய்ப்புகள் அதிகம்.

19.முட்டாள்தனம்
முட்டாள்தனங்கள் காரணமாக நிகழும் மரணங்கள் 19 வது இடத்தில் உள்ளன.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்