தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும் மத்திய அரசின் செயல் பயனளிக்காது, மக்கள் உண்மையை விரும்பும்போது, பாஜக அதை மறைக்கிறது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கருத்துத் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தகவல் ஆணையர்களின் ஊதியம், பணிக்காலம் ஆகியவற்றில் திருத்த முயற்சித்து அதற்கான வரைவு மசோதாவை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது.

இது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டிவிட்டரில்

நாட்டில் உள்ள ஒவ்வொரு இந்தியருக்கும் உண்மையைத் தெரிந்து கொள்ள உரிமையிருக்கிறது. ஆனால், பாஜக மக்களிடமிருந்து உண்மையை மறைக்க விரும்புகிறது. அவர்கள் அதிகாரத்தில் இருப்பவர்களை மக்கள் கேள்வி கேட்கக்கூடாது என்று பாஜக நினைக்கிறது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் செய்யப்பட உள்ள திருத்தங்கள் தேவையில்லாதது, பயனில்லாதது. இந்தத் திருத்தத்தை ஒவ்வொரு இந்தியரும் எதிர்க்கவேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்