தொடர்ச்சியாக உயர்ந்து வரும் தங்கத்தின் விலை இன்றும் அதிகரித்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூபாய் 38 உயர்ந்து ஒரு கிராம் 3,718 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம், ரூ.304 உயர்ந்து ரூ.29,744-க்கு விற்பனையாகிறது.

கடந்த 25 நாட்களில் தங்கள் விலை சவரனுக்கு ரூ.3,264 அதிகரித்துள்ளது. ரூபாய் மதிப்பு சரிவு மற்றும் அமெரிக்க- சீன வர்த்தகப் பதற்றத்தால் தங்கத்தின் விலை தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது.

22 கேரட் தங்கத்தின் விலை: 

இன்றைய காலை நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 640 ரூபாய் உயர்ந்துள்ளது. கிராமுக்கு 3,680 ரூபாய் ஆகவும், சவரனுக்கு 29,440 ரூபாய் ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. 

24 கேரட் தங்கத்தின் விலை: 

தூய தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 672 ரூபாய் உயர்ந்துள்ளது. சென்னையில் 24 கேரட் தூய தங்கத்தின் விலை கிராமுக்கு 3,780 ரூபாய் ஆகவும், சவரனுக்கு 30,912 ரூபாய் ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. 

வெள்ளியின் விலை: 

இன்று வெள்ளி விலை ஒரு ரூபாய் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி விலை இன்று 49.20 ரூபாயாக உள்ளது. ஒரு கிலோ வெள்ளி 49,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here