இந்திய பங்குச் சந்தைகள் திங்கட்கிழமை (இன்று) காலை முதல் உயர்வுடன் காணப்படுகின்றன.

மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டெண் சென்செக்ஸ் 240.53 புள்ளிகள் உயர்ந்து 34,246.29 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி 79.10 புள்ளிகள் உயர்ந்து 10,534.05 புள்ளிகளுடனும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

நிஃப்டி பட்டியலிலுள்ள ஓ.என்.ஜி.சி; டாடா ஸ்டீல், அம்புஜா சிமெண்ட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்து வர்த்தகமாகி வருகின்றன. அதேபோன்று எஸ்பிஐ, பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை சரிந்து வர்த்தகமாகி வருகின்றன.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 64.26ஆக உள்ளது.

எஸ்.பி.ஐ பங்குகள் 2.77 சதவிகிதம் சரிவுடன் காணப்படுகின்றன. முன்னதாக வெள்ளிக்கிழமையன்று 296.40 ரூபாயாக இருந்த பங்கு ஒன்றின் விலையில், தற்போது 8.20 ரூபாய் சரிந்து 288.20 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது.


* கடந்த 52 வாரங்களில் பங்கொன்றின் அதிகபட்ச விலை : ரூ.351.30

* கடந்த 52 வாரங்களில் பங்கொன்றின் குறைந்தபட்ச விலை : ரூ.241.15

அதிகரிக்கும் எஸ்பிஐ வாராக்கடன்

2016-17ஆம் ஆண்டின் மொத்த வாரக்கடன் 81,683 கோடி ரூபாயாகும். இதில் எஸ்பிஐ வங்கியின் வாரக்கடன் 20,339 கோடி ரூபாயாகவுள்ளது. இதனைத்தொடர்ந்து, பஞ்சாப் நேஷனல் வங்கி – 9,205 கோடி ரூபாய்; பேங்க் ஆஃப் இந்தியா – 7,346 கோடி ரூபாய்; கனரா பேங்க் – 5,545 கோடி ரூபாய்; பேங்க் ஆஃப் பரோடா – 4,348 கோடி ரூபாயாகவுள்ளது. மேலும், கடந்த காலாண்டில் 2,416 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக எஸ்பிஜ வங்கி தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்: எழுதப் படிக்க கஷ்டப்படுகிறதா குழந்தை? இதைப் பாருங்கள்