அதானி, டாடாவிடம் யூனிட் ரூ.9.13-15விலை கொடுத்து சூரிய மின்சாரம் வாங்கும் குஜராத் அரசு

Of the these private entities, 38 sold power to Gujarat at Rs 15 per unit, while the remaining 23 players sold at Rs 9.13 to Rs 13.59 per unit.

0
171

குஜராத் அரசு அதானி டாடா உள்ளிட்ட தனியார் நிறுவனங்களிடம் இருந்து யூனிட்டுக்கு ரூ.15 விலைக்கு வாங்கி உள்ளது.

குஜராத் மாநிலத்தில் சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிப்பது அதிக அளவில் நடைபெறுகிறது. இங்கு வெயில் அதிகம் என்பதால் பல தனியார் நிறுவனங்கள் இங்கு சூரிய மின் நிலயங்கள் அமைத்து மின்சாரத்தை மாநில மின் வாரியத்துக்கு விற்பனை செய்து வருகிறது. சமீபத்தில் முடிந்த குஜராத் நிதிநிலை சட்டப்பேரவை தொடரில் இது குறித்து காங்கிரஸ் சார்பில் கேள்வி எழுப்பப்பட்ட்து .

காங்கிரஸ் உறுப்பினர் மோகன்சின் ரத்வா வின் கேள்விக்கு மத்திய அரசு பதில் தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில், ‘கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் மார்ச் 2020 வரை குஜராத் அரசு மொத்தம் 61 நிறுவனங்களிடம் இருந்து சூரிய மின்சக்தி வாங்கி உள்ளது. இதில் 38 தனியார் நிறுவனங்களிடம் இருந்து ஒரு யூனிட் ரூ.15 விலையிலும் மீதமுள்ள 23 நிறுவனங்களிடம் ரூ.9.13லிருந்து ரூ.13.59 வரை விலைக்கு வாங்கப்பட்டுள்ளது.

இந்த 61 தனியார் நிறுவனங்களிடம் இருந்து 5 ஆண்டுகளில் 620 கோடி யூனிட் சூரிய மின்சாரம் வாங்கப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை இதே நிறுவனங்களிடம் இருந்து மேலும் 57.3 கோடி யூனிட் மின்சாரம் வாங்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட 5 ஆண்டுக் காலத்தில் அதிகபட்சமாக 32.8 கோடி யூனிட் மின்சாரம் அதானி நிறுவனத்திடம் இருந்து யூனிட் ரூ.15க்கு வாங்கப்பட்டுள்ளது. சென்ற கால கட்டத்தை விட அதானி குழுமத்திடம் இருந்து 10.2% அளவிலான மின்சாரம் அதிகமாக வாங்கப்பட்டுள்ளது. டாடா நிறுவனத்திடம் இருந்து 21 கோடி யூனிட் சூரிய மின்சாரம் யூனிட்டுக்கு ரூ.15 விலையில் வாங்கப்பட்டுள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here