ஆஸ்திரேலிய அரசு சர்ச்சைக்குரிய இந்திய நிறுவனமான அதானியின் நிலக்கரிசுரங்கத் திட்டத்துக்கான தொடக்க பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கியுள்ளது.

குவீன்ஸ்லாந்திலுள்ள கலீலி ஆற்றுப் பள்ளத்தாக்கில் அதானி குழுமம் நிலக்கரி எடுக்கவிருக்கும் இடம் உள்ளது. சுற்றுச்சூழல் அனுமதிகளுக்காக இத் திட்டம் பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்று (வியாழக்கிழமை) அதானி குழுமத்துக்கு நிலக்கரி எடுப்பதற்கான அனுமதியை அந்த மாகாண அரசு வழங்கயுள்ளது.

ஆனால், இத் திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு என்னென்ன மாதிரியான விளைவுகள் இருக்கும் என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை என்று விமர்சகர்கள் கூறுகின்றனர். 

ஆரம்பத்தில், இந்த திட்டம் மூலமாக 10,000 பேருக்கு வேலை கிடைக்கும் என்றும், உலகிலேயே மிகப்பெரிய சுரங்கமாக இது இருக்கும் என்றும் அதானி உறுதியளித்தார். ஆனால், நினைத்த வேகத்தில் இத்திட்டம் நிறைவேறாததால் தற்போது வெறும் 1,000 பேர் அளவே வேலைக்கு பணியமர்த்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதானி குழுமத்துக்கு அனுமதி வழங்கியதை அடுத்து குவீன்ஸ்லாந்தில்நிலக்கரி எடுக்க காத்திருக்கும் இன்னும் 6 நிலக்கரி சுரங்க நிறுவனங்களுக்கும் அரசுஅனுமதி வழங்கிவிடுமோ என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here