அதானியின் அனல்மின் நிலையத்துக்காக விதிகளை தளர்த்த மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு அழுத்தம் கொடுத்த மத்திய மின் அமைச்சகம்

According to correspondence and file notes accessed by The Wire, there was no consensus between the Central Pollution Control Board and the Ministry of Power on relaxing air pollution standards until May 2019.

0
385

நிலக்கரி அனல் மின் நிலையத்திற்கான காற்று மாசுக்கட்டுப்பாடு அளவீடுகளை தளர்த்துவதற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் (சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்துகான அமைச்சகம் )  முதற்கட்ட ஒப்புதலை அளித்துள்ளது.  மே 17, 2019 அன்று அமைச்சகத்தின் இணைச் செயலாளர் ரிதேஷ்குமார் சிங்கின் தலைமையில் நடந்த கூட்டத்தில் இந்த முடிவெடுக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது . 

அனல் மின் நிலையங்களுக்கு தற்போது அனுமதிக்கப்பட்டு வரும் காற்றில் வெளியிடப்படும் நைட்ரஜன் ஆக்சைடு மாசு அளவான 300mg/Nm3-லிருந்து 450mg/ Nm3-ஆக அதிகரிக்க அனுமதிக்க வேண்டும் என்று மத்திய மின் அமைச்சகம் பல நாட்களாக அனுமதி கேட்டிருந்ததாக  தி வயர் தளத்திற்கு கிடைத்த ஆவணங்கள் தெரிவிக்கிறது. இதனை மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கடுமையாக எதிர்த்து வந்தது. தற்போது மத்திய  மின் அமைச்சகத்தின் கோரிக்கையை ஏற்று மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி கொடுத்துள்ளது .  

இந்த கூட்டத்துக்கு முன்னால்  நான்கு அனல் மின் நிலையங்களின்  ஏழு மையங்கள் குறித்த கண்காணிப்பு அறிக்கைகளை மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மத்திய சுற்றுசூழல் அமைச்சகத்துக்கு அனுப்பியிருந்தது .  இதில்   2 மையங்களில்  காற்றில் வெளியிடப்படும் நைட்ரஜன் ஆக்சைடு , விதிக்கப்பட்டிருந்த  300mg/Nm3 அளவை கடந்து இருந்தது . 

மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும்  , மின் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மத்திய மின்சார ஆணையமும் இணைந்து நடத்திய கண்காணிப்பில் இது  தெரியவந்தது . மாசு அளவை மீறி இருந்த அந்த  2 மையங்களும் ராஜஸ்தானில்  கவாய் பகுதியில் உள்ள அதானி பவர் மின் உற்பத்தி நிறுவனத்துக்கு சொந்தமானது . 

மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மத்திய மின்சார வாரியம் ஆகிய இரு அமைப்புகளுக்கும் இடையில் நீண்டகாலமாக அனல் மின் நிலையங்களில் மாசுக் கட்டுப்பாட்டு அளவீடு தொடர்பாக ஒத்த கருத்து இல்லாததால், இரண்டு அமைப்புகளும் இணைந்து அனல் மின் நிலையங்களிலிருந்து வெளியாகும் காற்று மாசு அளவைக் கண்காணிப்பது என்றும் அதன் இறுதி அறிக்கைகளில் இருந்து முடிவெடுக்கலாம் என்றும் முடிவு செய்யப்பட்டது.

ராஜஸ்தானின் கவாய் பகுதியில் உள்ள அதானி பவர் மின் உற்பத்தி நிறுவனத்தின் இரண்டு மையங்கள் , நாக்பூரில் உள்ள தேசிய அனல் மின் கழக சிறப்பு அனல்மின் உற்பத்தி நிலையம், ஹரியானாவின் ஜாஜ்ஜார் பகுதியில் உள்ள மகாத்மா காந்தி மின் உற்பத்தி நிலையம், பஞ்சாபின் ராஜ்புரா பகுதியில் உள்ள நபா பவர் மின் உற்பத்தி நிலையம் ஆகிய நிறுவனங்களின் அனல் மின் உற்பத்தி நிலையங்களை மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மத்திய மின்சார வாரியமும் இணைந்து தொடர்ந்து 48 நாட்களுக்கு (பிப்ரவரி 13, 2019 முதல் ஏப்ரல் 2, 2019 வரை) மாசு அளவைக் கண்காணித்தன.

இந்த நான்கு அனல் மின் நிலையங்களின்  கண்காணிப்பு அறிக்கையை சுற்றுச் சூழல் அமைச்சகத்துக்கு  மே 2, 2019 அன்றுதான் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அனுப்பியிருந்தது .

கடந்த 2015-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், சுற்றுச்சூழல் அமைச்சகம் அனல் மின் நிலையங்களுக்கான காற்று மாசு அளவுகளை நிர்ணயித்தது.  2003 லிருந்து 2016 க்குள் அமைத்த அனல் மின் நிலையங்களில் நைட்ரஜன் ஆக்சைடு வெளிப்பாடு 300 mg/Nm3-க்கு அதிகமாக இருக்கக் கூடாது என நிர்ணயித்தது.

மே 17, 2019 அன்று அமைச்சகத்தின் இணைச் செயலாளர் ரிதேஷ்குமார் சிங்கின் தலைமையில் நடந்த கூட்டத்தில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம்  முதற்கட்ட ஒப்புதலை அளித்துள்ளதன் படி நைட்ரஜன் ஆக்சைடு வெளிப்பாடு 300 mg/Nm³ லிருந்து  450 mg/Nm³ வரை இருக்கலாம் என்று கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது . 

மத்திய மின் அமைச்சகத்தின் அதிகாரிகள், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், என்டிபிசி அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் கலந்துக் கொண்டுள்ளனர். மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் மற்றும் மின் அமைச்சகத்தின் செயலாளர்கள் இது குறித்த இறுதி முடிவை எடுப்பார்கள் .

மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும்  , மின் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மத்திய மின்சார ஆணையமும் இணைந்து நடத்திய  கண்காணிப்பு அறிக்கையின் படி, அதானி குழுமத்தின் இரண்டு மின் நிலையங்களில் நைட்ரஜன் ஆக்சைடு வெளிப்பாடு முறையே 509 mg/Nm3 மற்றும் 584 mg/Nm3-ஆக இருக்கிறது. இது தற்போது  அனுமதிக்கப்பட்ட அளவான 300 mg/Nm3-க்கு மிகவும் அதிகமாகும். அதானியின் மற்ற 5 அனல் மின் நிலையங்களின் நைட்ரஜன் ஆக்சைடு வெளிப்பாடு 200 mg/Nm3-லிருந்து 300 mg/Nm3  -குள் இருந்துள்ளது.

நைட்ரஜன் ஆக்சைடு காற்றில் அதிகமாக கலந்திருப்பது நுரையீரல் தொடர்பான கடுமையான நோய்களை ஏற்படுத்தும். வாகனங்களில் இருந்து வரும் புகையை அடுத்து அனல் மின் நிலையங்கள் வெளியிடும் நைட்ரஜன் ஆக்சைடு காற்றை அதிகமாக மாசு பட வைக்கிறது . இந்தியாவில் இருக்கும் அனல் மின் நிலையங்கள் உலகிலேயே ஆரோக்கியமற்றது என்ற அறிக்கையை ஸ்விட்சர்லாந்தில் இருக்கும் ETH Zurich University 2019 பிப்ரவரி மாதம் வெளியிட்டது . 

காற்றில் மாசுபாட்டு அளவை தளர்த்துவதில் மாசு கட்டுப்பாட்டு வாரியமும், மத்திய மின் அமைச்சகமும் மே 2019 வரையில் முரண்பட்டு நின்றது . குறிப்பாக 2003-ஆம் ஆண்டிலிருந்து 2016-ஆம் ஆண்டுக்கு இடையிலான காலகட்டத்தில் தொடங்கப்பட்ட அனல் மின் நிலையங்களில், நைட்ரஜன் ஆக்சைடு வெளிப்பாடு 300 mg/Nm3-க்கு அதிகமாக இருக்கக் கூடாது என நிர்ணயித்தது. 

அதே போல 2017-ஆம் ஆண்டுக்குப் பிறகு தொடங்கப்பட்ட அனல்மின் நிலையங்களுக்கான அனுமதிக்கப்பட்ட நைட்ரஜன் ஆக்சைடு வெளிப்பாட்டின் அளவு 100 mg/Nm3 .

அதானி அனல் மின் நிலையத்தைத் தவிர பஞ்சாபின் ராஜ்புராவில் அமைந்திருக்கும் நபா அனல் மின் நிலையத்தால் நைட்ரஜன் ஆக்சைடு வெளிப்பாட்டின் அளவு 522.7 mg/Nm³ மற்றும்  559.4 mg/Nm³ அளவாக இருக்கிறது.  

மத்திய மாசுக் கட்டுப்பாட்டுத் துறை விஞ்ஞானிகளின் ஆலோசனையின் பேரில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம்,  சுற்றுச் சூழல் அளவீடுகளை பல்வேறு துறைகளுக்கு நிர்ணயிக்கிறது. பல்வேறு துறைசார் வல்லுனர்கள் மற்றும் தொழிற்துறை வல்லுனர்களுடன் கலந்தாலோசித்து விவாதித்த பின்னரே அனல் மின் நிலையங்களுக்கான, தண்ணீர் நுகர்வு, சல்பர் டை ஆக்சைடு வெளியீடும் நைட்ரஜன் ஆக்சைடு வெளியீடு ஆகிவற்றிற்கான கட்டுப்பாடுகளை கடந்த 2015-ஆம் ஆண்டில் நிர்ணயித்தது.

தி வயர் தளம் அதானி நிறுவனத்துக்கு அனுப்பியிருந்த கேள்விகளுக்கு அவர்கள்  அளித்த பதில் இதுதான் – அதானியின் அனைத்து அனல் மின் நிலையங்களும் தற்போது இருக்கும் அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றியே வருகிறது. தற்போது நைட்ரஜன் ஆக்சைடு வெளியீடு குறித்து எந்த கட்டுப்பாடும் இல்லை. 11.12.2017 அன்று மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் விதித்திருந்த விதிமுறைகளை ராஜஸ்தான் அதானி அனல் மின் நிலையம் 2022 லிருந்து நடைமுறை படுத்தும்.    

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் செப்டம்பர்1, 2017 வகுத்த விதிமுறைகளை 2018 முதல் செயல்படுத்த வேண்டும் என்று கூறியிருந்தது . ஆகஸ்ட் 2019 இல் வெளிவந்த கணக்குபடி , அதானியின் ராஜஸ்தான் அனல்மின் நிலையத்தின் 2 மையங்கள் வெளியிட்ட நைட்ரஜன் ஆக்சைடின் அதிகபட்ச அளவு 685.45 mg/Nm³ & 616.73 mg/Nm³ . குறைந்தபட்ச அளவு 129.77 mg/Nm³ &  190.20 mg/Nm³. 

மத்திய மின் அமைச்சகம் அக்டோபர் 13, 2017 வெளியிட்ட அறிக்கையில் 1,96,667 மெகாவாட் திறன் கொண்ட அனல் மின் நிலையங்கள் 2022 லிருந்து புதிய விதிமுறைகளை பின்பற்றினால் போதும் என்று கூறுகிறது . முன்னதாக, மத்திய மின் அமைச்சகம் 2024 ஆம் ஆண்டு வரை காலக்கெடுவை அமைக்க முயற்சித்தது .  

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் விதித்திருந்த விதிமுறைகளை டிசம்பர் 2017லிருந்து பின்பற்றியிருக்க வேண்டும்.  மத்திய மின் அமைச்சகம் மற்றும்  மத்திய மின்சார ஆணையமும் தொடர்ந்து கொடுத்த அழுத்தத்தின் காரணமாக 2017 லிருந்து பின்பற்ற வேண்டிய விதிகளை 2022லிருந்து பின்பற்றினால் போதும் . 

அனல் மின் நிலையங்களுக்கான, தண்ணீர் நுகர்வு, சல்பர் டை ஆக்சைடு வெளியீடும் ஆகியவற்றுக்கான வரம்புகளும் நீர்த்து போய்விட்டது .   2017 – 2018 இல் காற்று மாசு கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து கேட்ட போதெல்லாம் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் பதில் இதுதான் இலக்கை அடைவதற்கு தொழில்நுட்பம் அல்லது செயல்பாட்டு தடைகள் எதுவும் இல்லை 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here