அதர்வா, ஹன்சிகா இணைந்து நடித்துவரும் 100 படம் குறித்து அப்படத்தின் இயக்குநர் ட்விட்டரில் செய்தி வெளியிட்டுள்ளார்.

ஜீ.வி.பிரகாஷ் நடிப்பில் டார்லிங், எனக்கு இன்னொரு பேர் இருக்கு படங்களை இயக்கியவர் சாம் ஆண்டன். முதல் படம் வெற்றியும், இரண்டாவது படம் தோல்வியும் அடைந்த நிலையில் மூன்றாவதாக அதர்வா, ஹன்சிகா நடிக்கும் படத்தை இயக்கினார். 100 என பெயர் வைக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்துக்கு கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்ய, சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.

100 படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்துவிட்டதாக சாம் ஆண்டன் ட்விட்டரில் கூறியுள்ளார். விரைவில் போஸ்ட் புரொடக்ஷனை முடித்து விநாயகர் சதுர்த்திக்கும், தீபாவளிக்கும் நடுவில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். ஆரா சினிமாஸ் படத்தை தயாரித்துள்ளது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்