அதர்வா, ராஷி கண்ணா நடித்துள்ள இமைக்கா நொடிகள் படத்தின் பாடல் வீடியோவை இன்று மாலை 5 மணிக்கு யூடியூபில் வெளியிடுகின்றனர்.

டிமாண்டி காலனி படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்துவின் புதிய படம் இமைக்கா நொடிகள். நயன்தாரா, அதர்வா, ராஷி கண்ணா நடித்துள்ள இந்தப் படத்தில் இந்திப்பட இயக்குநர் அனுராக் காஷ்யப் வில்லனாக நடித்துள்ளார். அவரது சைக்கோ கொலைகாரன் வேடம் பேசப்படும் என்கிறார்கள்.

இமைக்கா நொடிகளுக்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார். அவரது இசையில் வெளியான விளம்பர இடைவேளை எனத் தொடங்கும் பாடல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. அதனால் அதன் வீடியோவை இன்று மாலை 5 மணிக்கு யூடியூபில் வெளியிடுகின்றனர். அதர்வாவின் காதலியாக இதில் ராஷி கண்ணா நடித்துள்ளார்.

இமைக்கா நொடிகள் ஆகஸ்ட் 24 திரைக்கு வருகிறது.
#Atharva, #ImaikkaaNodigal

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்